Pages

Friday, September 4, 2009

உபுண்டுவில் splash image நிறுவுவது எப்படி?

உபுண்டுவில் splash image நிறுவுவது எப்படி?

உபுண்டுவில் grub 2 install செய்வது பற்றி முன்னர் பார்த்தோம். இப்போது splash image நிறுவுவது பற்றி பார்ப்போம்.

முதலில் கீழ்கண்ட கட்டளையின் மூலம் டெர்மினலில் நிறுவிக்கொள்ளவேண்டும்.

sudo aptitude install grub2-splashimages

பின்னர் file browser சென்று பார்த்தால் /usr/share/grub/ folderல் சிறு படங்களாக தெரியும்.


இங்கு நமக்கு பிடித்த படத்தின் பெயர் *.png என்று முடிந்திருக்கும். extension இல்லாத பெயராக குறித்துக்கொள்ளவும். பின்னர்
/etc/grub.d/05_debian_theme... என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும்.

sudo gedit /etc/grub.d/05_debian_theme

அதில் உள்ள கீழ்கண்ட வரியை

[...]
for i in {/boot/grub,/usr/share/images/desktop-base}/moreblue-orbit-grub.{png,tga} ; do
[....]

கீழ்கண்டவாறு மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
[...]
for i in {/boot/grub,/usr/share/images/desktop-base,/usr/share/images/grub}/Moraine_Lake_17092005.{png,tga} ; do
[...]

இதில் Moraine_Lake_17092005 என்பது படங்களின் பெயர்களாகும்.

பின்னர்

sudo update-grub

sudo reboot செய்தால் splash image தோன்றும்.