Pages

Friday, August 27, 2010

உபுண்டுவில் load indicator

உபுண்டுவில் load indicator நிரல் என்பது எந்த ஒரு நிரலும் குறிப்பிட்ட mb க்கு மேல் நினைவகத்தை எடுத்துக்கொண்டால் அதை மேசையின் மீது காட்டும் ஒரு நிரல் ஆகும்.

இந்த நிரலை இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் இந்த நிரலை இயக்க Applications->System Tools->System Load Indicator செல்ல வேண்டும்.


இந்த நிரல் மேல் பகுதியிலுள்ள பேனலில் ஐகானாக இருக்கும்.


இந்த ஐகானில் கர்சரை வைத்து இடது சொடுக்க வரும் விண்டோவில் எந்தஎந்த நிரல் அதிக அளவு எம்பி எடுத்துகொண்டிருக்கிறதோ அதை காட்டிவிடும்.


பின்னர் Preferences சென்று நமக்கு வேண்டிய அமைப்புகளை அமைத்துக்கொள்ளலாம்.


இதில் Memory valveல் எந்த அளவுக்குமேல் சென்றால் notification வரவேண்டுமோ அதை குறிப்பிட வேண்டும்.CPU valveல் சிபியு எந்த அளவுக்குமேல் நினைவகத்தை எடுத்துகொண்டால் notification வரவேண்டுமோ அதை குறிப்பிட வேண்டும். பின்னர் close செய்துவிட்டு வெளியேறவேண்டும்.

இந்த நிரலை ஆரம்பித்தவுடனே notification வந்துவிடும்.


No comments: