Pages

Sunday, October 31, 2010

உபுண்டு rhythmboxல் 10 band equaliser plugin சேர்த்தல்

உபுண்டு ரிதம்பாக்ஸில் equaliser இருப்பதில்லை. இதனை pluginஆக சேர்த்து ஒலியின் தரத்தை மேம்படுத்த உதவும். முதலில் டெர்மினலில்

wget http://jorge.fbarr.net/files/rhythmbox-eq.tar.gz

இதன் பிறகு /.gnome2/rhythmbox/plugin என்ற ஒரு அடைவினை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

mkdir -p ~/.gnome2/rhythmbox/plugins/

பின்னர் தரவிறக்கப்பட்ட rhythmbox-eq.tar.gz என்ற கோப்பினை விரித்து மேலே சொன்ன அடைவினுள் சேர்த்துவிடவேண்டும்.

tar -zxvf rhythmbox-eq.tar.gz -C ~/.gnome2/rhythmbox/plugins/

இப்போது Applications->Sound&video->Rhythmbox music player->edit->plugins செல்ல வேண்டும்.




இப்போது equaliser plugin சேர்ந்துவிட்டிருக்கும். பின்னர் வலது பக்கமுள்ள configure பொத்தனை அழுத்தினால் equaliserஐ ஒலி அமைப்புகளை நம் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.



இதில் delete பொத்தானை அழுத்தினால் default ஆக உள்ள அமைப்புகள் திரும்ப வந்துவிடும்.

Saturday, October 30, 2010

உபுண்டுவில் GCompris

உபுண்டுவில் 2-10 வயதுள்ள குழந்தைகள் விளையாட ஏற்ற நிரல் தான் GCompris. இதனை நிறுவ ubuntu software centerலிருந்து நிறுவிக்கொள்ளலாம்.இதிலேயே tuxpaint போன்ற நிரல்கள் உள்ளன.


இந்த நிரலை இயக்க Applications->Education->Educational suite GCompris செல்ல வேண்டும்.


இதில் GCompris Administration சென்றால் பயனாளர்களை சேர்த்துக்கொள்ளலாம். குழுவாக விளையாட குழுக்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.



1.mouse மற்றும் keyboardகளை எப்படி உபயோகப்படுத்துவது.
2.எளிமையான கணக்குகள்
3.கடிகாரம் எப்படி நேரம் பார்ப்பது.
4.ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களை அதன் ஒலி கேட்டு படிப்பது
5.அனிமெ ஷன்களை உருவாக்குதல்

போன்ற விளையாட்டுக்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் விதமாக உள்ளது.

ஒலி அமைப்பும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி விளையாக ஏற்றது.

65 Mb உள்ளது. நிறுவினால் 102 எம்பி நினைவகத்தை எடுத்துக்கொள்ளும்.

பிற்சேர்க்கை: இதன் அமைப்பில் தமிழும் உண்டும். மொழியை தமிழ் தேர்ந்தெடுத்தால் உதவி குறிப்புகள் தமிழில் வரும்.






இது பற்றிய ஒரு வீடியோ

Wednesday, October 27, 2010

உபுண்டுவை பற்றிய ஒரு விளம்பரப்படம்

உபுண்டுவை பற்றிய ஒரு விளம்பரப்படம்.

உபுண்டு நெருப்பு நரி உலாவியில் ஒரு பெரிய security bug

உபுண்டு நெருப்பு நரியில் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடித்த அலெக்ஸ் மில்லர் என்ற 12 வயது சிறுவனுக்கு 3000 டாலர்கள் பரிசு. அந்த பையனின் os உபுண்டுதான். மொசில்லாவின் Brandon Stene இவர் பாதுகாப்பு அதிகாரி, இந்த பையனை ஒரு ஜீனியஸ் என்று புகழ்ந்திருக்கிறார்.

அது பற்றி CBS வெளியிட்டு உள்ள ஒரு வீடியோ.



அந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் நெருப்பு நரி இது போன்ற பாதுகாப்பு குறைபாட்டை தவிர்க்கும் என்று நம்புவோம்.

Tuesday, October 26, 2010

உபுண்டுவில் பயனாளரின் கடவுச்சொல் மாற்ற ஒரு script

உபுண்டுவில் கடவுச்சொல் மாற்ற இந்த script உதவுகிறது. முதலில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து ஒரு text கோப்பினுள் இடவும். பின்னர் அதற்கு ஒரு பெயர் கொடுத்து சேமிக்கவும். இந்த script இயங்க முதலில் expect என்னும் நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். எனவே டெர்மினலில்

sudo apt-get install expect என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ளவேண்டும்.

#!/usr/bin/expect -f
# Password change shell script, tested on Linux and FreeBSD
# ----------------------------------
# It need expect tool. If you are using Linux use following command
# to install expect
# apt-get install expect
# display usage
if {$argc!=2} {
send_user "usage: $argv0 username password \n"
exit
}
# script must be run by root user
set whoami [exec id -u]
if {$whoami!=0} {
send_user "You must be a root user to run this script\n"
exit
}
#
set timeout -1
match_max 100000
# stopre password
set password [lindex $argv 1]
# username
set user [lindex $argv 0]
# opem shell
spawn $env(SHELL)
# send passwd command
send -- "passwd $user\r"
expect "assword:"
send "$password\r"
expect "assword:"
send "$password\r"
send "\r"
expect eof

நான் இதற்கு chpass.sh என்று பெயர் கொடுத்து மேசைமீது வைத்திருக்கிறேன். எனவே டெர்மினலில்

arulmozhi@arulmozhi-945GZM-S2:~$ cd Desktop

arulmozhi@arulmozhi-945GZM-S2:~/Desktop$ sudo chmod +x chpass.sh
arulmozhi@arulmozhi-945GZM-S2:~/Desktop$ ./chpass.sh
usage: ./chpass.sh username password

arulmozhi@arulmozhi-945GZM-S2:~/Desktop$ ./chpass.sh username password
You must be a root user to run this script
arulmozhi@arulmozhi-945GZM-S2:~/Desktop$ sudo ./chpass.sh username password
spawn /bin/bash
passwd arulmozhi
root@arulmozhi-945GZM-S2:~/Desktop# passwd arulmozhi
Enter new UNIX password:
Retype new UNIX password:
passwd: password updated successfully
root@arulmozhi-945GZM-S2:~/Desktop#
root@arulmozhi-945GZM-S2:~/Desktop#

இந்த script ஐ உபயோகிக்க

sudo ./chpass.sh username password என்று கட்டளையிடவேண்டும்.


இப்போது கடவுச்சொல் மாற்றப்பட்டு இருக்கும்.

Monday, October 25, 2010

உபுண்டுவில் ஒரு சிறிய script

உபுண்டுவில் நம்முடைய பெயருடன் good day/good morning என்று செய்தி வருவதற்கு ஒரு சிறிய script.

கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து ஒரு கோப்பில் பேஸ்ட் செய்து செமிக்கவும். உதாரணமாக gday.sh என்று வைத்துக்கொள்ளவோம்.

#!/bin/bash
# Shell Script to ask user his/her name and then display it with a
# GoodDay/Good morning message
# -----------------------------------------------------

echo "Hi! I'm $(hostname) computer!!"
echo -n "May I know your name please ? "
read yourname
echo "Good Day $yourname"

பின்னர் டெர்மினலில்

arulmozhi@arulmozhi-945GZM-S2:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-945GZM-S2:~/Desktop$ sudo chmod +x gday.sh
[sudo] password for arulmozhi:
arulmozhi@arulmozhi-945GZM-S2:~/Desktop$ ./gday.sh

இதன் விடை

Hi! I'm arulmozhi-945GZM-S2 computer!!
May I know your name please ? arulmozhi r
Good Day arulmozhi r

arulmozhi@arulmozhi-945GZM-S2:~/Desktop$

நான் இந்த கோப்பினை மேசையின் மீது வைத்திருக்கிறேன்.


Sunday, October 24, 2010

உபுண்டு 10.10 ல் grub2வின் பின்புல படத்தை மாற்றுதல்



உபுண்டு grub2வின் பின்புல படம் கருப்பு வெள்ளையாகதான் இருக்கும். அதனை நமக்கு விருப்பமான படத்தை வரவழைக்க முடியும். இதற்கு முதலில் டெர்மினலில்

sudo gedit /etc/grub.d/05_debian_theme என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து கொள்ள வேண்டும். அதில் கீழ்க்கண்ட வரியை கண்டுபிடித்து மாற்றம் செய்யவேண்டும்.

WALLPAPER="/usr/share/images/desktop-base/moreblue-orbit-grub.png"

இதில் "/usr/share/images/desktop-base/moreblue-orbit-grub.png" என்பதற்கு பதிலாக நமக்கு விருப்பமான படத்தின் பெயரை கொடுக்க வேண்டும்.

WALLPAPER="/home/username/Pictures/filename.jpg என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.


இறுதியில் டெர்மினலில்

sudo update-grub என்ற கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும். இப்போது கணினியை மீள துவங்க grub2வில் பின்புல படம் மாறி இருப்பதை பார்க்கலாம்.

உபுண்டுவில் இணைய தொலைக்காட்சி sopcast player

உபுண்டுவில் இணைய தொலைக்காட்சி பார்ப்பதற்க்கு இந்த sopcast player உதவுகிறது. இந்த நிரலை ppa மூலம் நிறுவலாம். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:ferramroberto/sopcast
sudo apt-get update
sudo apt-get install sopcast-player

நிரலை நிறுவியவுடன் Applications->sound&video->sopcast player செல்ல வேண்டும்.


இணைய தொலைக்காட்சி பார்ப்பதற்கு mplayer, vlc ஆகியவற்றை கொண்டும் பார்க்கலாம்.

Edit->Preferences சென்று use external player டிக் செய்திட வேண்டும். mplayer அதில் default ஆக இருக்கும்.




விஎல்சியிலும் இதனை இயங்க வைக்க முடியும். use external playerல் commandல் vlc என்று தட்டச்சு செய்து close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும். இப்போது இயக்கினால் விஎல்சியில் இணைய தொலைக்காட்சி இயங்க தொடங்கும்.


Saturday, October 23, 2010

உபுண்டுவில் sysrq கீயின் பயன்கள்

உபுண்டுவில் sysrq கீ என்பது printscr உடன் சேர்ந்து இருக்கும். இந்த கீயை கணினி hang ஆகி நின்றுவிட்டால் மீண்டும் இயக்க வைக்கலாம். எந்தவிதமான டேட்டா இழப்பு இல்லாமல் கணினியை reboot செய்ய வைக்கலாம்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo gedit /etc/sysctl.conf

இதில் sysctl.conf என்ற கோப்பு etc என்ற அடைவினுள் இருக்கும். இந்த கோப்பினை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

இந்த கோப்பினுள் கீழ்கண்ட வரியை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிட வேண்டும்.

kernel.sysrq = 1



பின்னர் சேமித்து வெளியேற வேண்டும்.

இப்போது கணினி உறைந்து போய் நின்று விட்டால் alt+sysrq பொத்தான்களை அழுத்தி கீழ்வரும் எழுத்துக்களை அழுத்தவேண்டும்.

R S E I U B என்ற எழுத்துக்களை அழுத்தினால் கணினி திரையில் எழுத்துக்கள் ஒடி ஒரிடத்தில் வந்து நிற்கும். பின்னர் control+alt+f7 என்ற மூன்று கீகளையும் ஒருசேர அழுத்தினால் login பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும். அதை கொடுத்த பின் console மொடில் இருக்கும். இங்கு sudo reboot என்று கொடுத்தால் கணினி எந்தவிதமான டேட்டா இழப்பு இல்லாமல் reboot ஆகிவருவதை பார்க்கலாம்.

ஒருசில keyboard களில் இந்த கீ இருக்காது. printscr என்று இருக்கும்.

Wednesday, October 20, 2010

உபுண்டுவில் blutooth வழியாக ஆடியோ headset இணைத்தல்.

உபுண்டுவில் bluetooth வழியாக audio device எவ்வாறு இணைப்பது என்பது பற்றி பார்ப்போம்.

Sony யின் bluetooth headset ஒன்று இதற்கு பயன்படுத்தப்பட்டது.



முதலில் bluetooth tanggleஐ கணினியில் பொருத்திப்பட்டது. பின்னர் bluetooth headset ஆன் செய்தேன். பின்னர் கணினியில் top panel ல் இருந்த ஐகானில் வலது சொடுக்க வந்த விண்டோவில் setup new device தேர்ந்தெடுத்தேன்.


மேலே உள்ள படத்தில் உள்ளது போல் என்னுடைய headset கணினியில் தெரிந்தது. பின்னர் forward பொத்தானை அழுத்தினால் அடுத்த விண்டோ வந்தது.


இப்போது close பொத்தானை அழுத்தி விண்டோவை மூடவேண்டும். sound preference சென்று சில அமைப்புகளை கொடுக்க வேண்டும்.



மேலே உள்ள படத்தில் headset தெரிவதை பார்க்கலாம். கீழே உள்ள test speakers அழுத்தினால் headsetல் ஒலி தெளிவாக கேட்கும்.


இப்போது input ஆப்ஷனிலும் தெரிவதை காணலாம்.


மேலே உள்ள படத்தில் output optionல் உள்ளது. இங்கே bluetooth headset ஐ தேர்ந்தெடுத்து close பொத்தானை அழுத்தி வேளியேறவேண்டும். இப்போது விஎல்சிஐ இயக்கினால் காதில் பொருத்தப்பட்டுள்ள headsetல் பாடல்கள் கேட்கும். கணினியின் வேளிப்புற speakerகளில் ஒலி கேட்பதில்லை. ஏதேனும் நடுவில் தடங்கல் இருந்தால் ஒலியின் தரம் சற்று குறைகிறது.

Monday, October 18, 2010

உபுண்டு 10.10 நிறுவியப்பிறகு

உபுண்டு 10.10 நிறுவியாகிவிட்டது. அதன் பிறகு செய்ய வேண்டிய அல்லது நிறுவ வேண்டிய நிரல்களை பார்ப்போம். முதலில் software sourceல் செய்ய வேண்டியதை பார்ப்போம்.

System->Administration->software source சென்று தரப்பட்டுள்ள main, universe, restricted, multiverse ஆகியவைகளை டிக் செய்திட வேண்டும்.



பின்னர் other software சென்று canonical partners,canonical partners source code,independent,independent source ஆகியவைகளை டிக் செய்துவிட்டு close பொத்தானை அழுத்தும் போது reload பொத்தானை அழுத்தி கணினியினை update செய்துகொள்ள வேண்டும்.



அதன்பிறகு கீழ்கண்ட கட்டளைகளை டெர்மினலில் தட்டச்சு செய்தால் போதும்.

sudo apt-get install gstreamer0.10-ffmpeg gstreamer0.10-pitfdll gstreamer0.10-plugins-bad gstreamer0.10-plugins-bad-multiverse gstreamer0.10-plugins-ugly gstreamer0.10-plugins-ugly-multiverse gstreamer0.10-plugins-base gstreamer0.10-plugins-good libdvdnav4 libdvdread4 libmp4v2-0 libxine1-ffmpeg ffmpeg flashplugin-nonfree sun-java6-fonts rar unrar p7zip-full p7zip-rar unace unp zip unzip ttf-mscorefonts-installer ttf-liberation mencoder mplayer sun-java6-plugin sun-java6-jre


sudo /usr/share/doc/libdvdread4/install-css.sh

sudo apt-get install build-essential automake make checkinstall dpatch patchutils autotools-dev debhelper quilt fakeroot xutils lintian cmake dh-make libtool autoconf git git-core subversion bzr

sudo apt-get install vlc mozilla-plugin-vlc openshot gimp gthumb pidgin skype adobeair wine aptitude chromium-browser

மேற்கண்ட கட்டளைகளில் அனைத்துவிதமான ஆடியோ/வீடியோ கோடக்குகள் அடங்கும்.

Sunday, October 17, 2010

உபுண்டு vlcயின் இன்னொரு வடிவம்

உபுண்டுவில் விஎல்சியின் இன்னொரு வடிவத்தையும் காணலாம்.

டெர்மினலில் svlc என்று தட்டச்சு செய்யவேண்டும்.


மேலே கண்ட விண்டோவில் அம்பு குறி காட்டப்பட்டுள்ள் இடத்தில் கர்சரை வைத்து இடது சொடுக்க வரும் playlist விண்டோவில் பாடல்களை சேர்த்துக்கொள்ளலாம்.


மேலே உள்ள விண்டோவில் அம்பு குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் உள்ள '+' குறியை அழுத்தினால் பாடல்கள்/வீடியோ சேர்த்துக்கொள்ளலாம்.


Play பொத்தானை அழுத்தினால் மீடியா கோப்புகள் இயங்க தொடங்கும்.

Saturday, October 16, 2010

உபுண்டுவில் grub2வை மாற்றம் செய்ய



உபுண்டுவில் grub2 வை நம் விருப்பம் போல் வரிசையை மாற்ற மற்றும் வேறுசில மெனுக்களை சேர்க்க grub-customiser உதவும்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:danielrichter2007/grub-customizer
sudo apt-get update
sudo apt-get install grub-customizer


இந்த நிரலை நிறுவியப்பின்

Applications->system tools->grub customizer செல்ல வேண்டும்.


மேலே கண்ட விண்டோ வரும் இதில் மெனுக்களின் வரிசையை மாற்றம் செய்யலாம்.வேறு சில மெனுக்களை சேர்க்கலாம். மெனுக்களை சேர்ப்பதற்கு '+' குறியை அழுத்தவேண்டும்.

உபுண்டு 10.10ல் ஒரு சிறிய பிரச்சனை

உபுண்டு 10.10 நிறுவி அதில் எல்ல கோடக்குகளையும் நிறுவியப்பின் அதில் ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டது.

Places->Home folder சென்றால் vlc திறந்து அதில் உள்ள மீடியாக்கள் இயங்க ஆரம்பித்தன. வேறு எந்த partitionஐ திறந்தாலும் இதே பிரச்னை இருந்தது. ntfs அடைவினை திறந்தாலும் விஎல்சி திறந்து அதில் உள்ள மீடியா கோப்புகள் playlistல் சேர்ந்துகொண்டு இயங்க ஆரம்பித்தன.

ஆனால் Places->computer என்று திறந்தால் இந்த பிழை வருவது இல்லை.

இதற்கு காரணம் home folderல் உள்ள ஒரு கோப்பே காரணம் என்று புரிந்தது.

Places->Home folder->edit->view->hidden files சென்று show hidden filesனை டிக் செய்திட வேண்டும்.

பின்னர் .local->share->applications-> சென்று அதில் உள்ள கோப்பான mimeapps.list திறந்து அதில் inode/directory=vlc.desktop; என்ற வரியில் முன்னால் '#' குறியை சேர்த்து விட்டு சேமித்து வெளியேறிவிடவேண்டும்.

இப்போது places->Home folder சென்றால் திறந்து கொண்டது. எல்லா partitionகளும் எந்த பிரச்னை இல்லாமல் திறந்தது.




மேசை மீதுள்ள கோப்பின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் open with other applications என்பதனை தேர்ந்தேடுத்து அதன் கீழ்பகுதியில் இருக்கும் remember this application for folder files என்பதன் டிக் எடுத்துவிட்டு open பொத்தானை அழுத்தினால் இந்த பிரச்னை வருவதில்லை.

Wednesday, October 13, 2010

உபுண்டுவில் 10.10 ல் mplayer,multimedia codecs நிறுவுதல்

உபுண்டு 10.10 நிறுவியாகிவிட்டது. இப்போது multimedia codec நிறுவுவது எப்படி என்று பார்ப்போம். இந்த கோடக்ஸ் நிறுவுவதற்கு medibuntu.org ன் ppa இப்போது நன்றாக வேலை செய்கிறது. இந்த repositoryஐ software sourceல் சேர்ப்பதற்கு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get update

sudo wget http://www.medibuntu.org/sources.list.d/$(lsb_release -cs).list --output-document=/etc/apt/sources.list.d/medibuntu.list

sudo apt-get -q update

sudo apt-get --yes -q --allow-unauthenticated install medibuntu-keyring

sudo apt-get -q update

mediubuntu repositoryல் ஏதேனும் பிழைகள் இருந்தால் bug report உருவாக்க கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get --yes install app-install-data-medibuntu apport-hooks-medibuntu


w32codecs நிறுவ

sudo apt-get install w32codecs libdvdcss2

mplayer நிறுவ

sudo apt-get install mplayer

mozilla mplayer plugin நிறுவ

sudo apt-get install mozilla-mplayer

இந்த நிரல்களை deb க்களாக பெற இந்த சுட்டியை காணவும்.

Sunday, October 10, 2010

உபுண்டு 10.10 நிறுவுதல் பற்றி ஒரு வீடியோ

உபுண்டு 10.10 நிறுவுதல் பற்றிய ஒரு வீடியோ. youtubeல் பார்த்தது.

உபுண்டு 10.04லிருந்து 10.10க்கு மேம்படுத்த

உபுண்டுவின் புதிய பதிப்பு 10.10 வெளிவந்துவிட்டது. 10.04 உபயோகிப்பாளர்கள் புதிய பதிப்பிற்க்கு எப்படி மேம்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் டெர்மினலில்

sudo gedit /etc/update-manager/release-upgrades

என்று தட்டச்சு செய்து release-upgrades என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். அதில் prompt=lts என்பதனை தேர்ந்தெடுத்து prompt=normal என்று மாற்றி சேமித்து வெளியேறிவிடவேண்டும்.


பின்னர் system->administration->update manager சென்று check பொத்தானை அழுத்தினால் upgrade செய்ய ஆப்ஷன் வரும்.


மேலே வரும் விண்டோவில் upgrade பொத்தானை அழுத்தினால் மேம்படுத்துதல் ஆரம்பிக்கும்.


Saturday, October 9, 2010

உபுண்டு geditல் advanced find/replace

உபுண்டு டெக்ஸ்ட் கோப்புகளை திறக்க gedit பயன்படுத்துவோம். இதில் ஒன்றுக்குமேல் திறக்கப்பட்ட பல கோப்புகளில் குறிப்பிட்ட வார்த்தைகளை தேட மற்றும் மாற்ற ஒரு gedit plugin.

இதனை இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம். இதனை இயக்க கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ cd adv*
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop/advanced_find-0.3.0$ ./install.sh

இந்த தரவிறக்கப்பட்ட கோப்பினை மேசையின்மீது வைத்துள்ளேன். பின்னர் மீண்டும் டெர்மினலில் gedit என்று தட்டச்சு செய்தால் வெற்று கோப்பு திறக்கும். அதில் Edit->preferences->plugin செல்ல வேண்டும்.




மேலே படத்தில் காணப்படும் விண்டோ திறக்கும். அதில் Advanced find/replace டிக் செய்துவிட்டு close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும். இப்போது geditல் search சென்றால் Advanced find/replace ஒரு மெனுவாக வந்திருக்கும்.

Friday, October 8, 2010

உபுண்டு 10.10ம் 8.04ம் இணைந்த ஒரு வால்பேப்பர்

உபுண்டுவில் 10.10ம் 8.04ன் வால்பேப்பர்களும் இணைந்த ஒரு அருமையான வால்பேப்பர்.


இதனை தரவிறக்க இந்த சுட்டியை சொடுக்கவும்.

இதன் preview


Thursday, October 7, 2010

உபுண்டுவில் குறிப்புகள் எடுக்க mynotex

உபுண்டுவில் குறிப்புகள் எடுப்பதற்கு ஒரு எளிய நிரல்தான் mynotex. இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

இந்த நிரலை இயக்க applications->Office->MyNotex




இந்த நிரலின் பயன்கள்

1.பலவித கோப்புகளை இணைத்துக்கொள்ளலாம்.
2.subject,tag போன்றவற்றுடன் குறிப்புகளை அமைத்துக்கொள்ளலாம்.
3.openoffice writterலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.
4.ubuntu oneல் சேர்த்துக்கொள்ளலாம்.

Wednesday, October 6, 2010

உபுண்டுவில் தொலைக்காட்சி பார்க்க மற்றும் record செய்ய

உபுண்டுவில் ஆன்லைன் தொலைகாட்சி பார்க்க மற்றும் பார்த்தவற்றை பதிவு செய்ய ஒரு நிரல் freetuxtv. இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

இந்த நிரலை நிறுவியப்பின் Applications->Sound & video->FreetuxTV television channal player செல்ல வேண்டும்.


மேற்கண்ட விண்டோவில் நமக்கு தேவையான தொலைக்காட்சி நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்து இரட்டை கிளிக் செய்தால் நிகழ்ச்சிகள் தெரிய ஆரம்பிக்கும். இதில் சிகப்பு நிற பொத்தானை அழுத்தினால் நிகழ்ச்சிகள் பதிவு செய்ய ஆரம்பிக்கும். எவ்வளவு நேரம் பதிவு செய்ய வேண்டுமென்பதை அமைத்துக்கொள்ளலாம்.



இதில் நமக்கு தேவையான தொலைக்காட்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பதிவு செய்ததை விஎல்சியில் பார்க்க



இந்த தொலைக்காட்சியை கண்டுகளிக்க tv card தேவையில்லை. இணைய இணைப்பு மட்டும் போதும்.

Tuesday, October 5, 2010

உபுண்டுவில் ubuntu tweak பயன்படுத்திபழைய கெர்னல்களை நீக்க




உபுண்டுவில் ubuntu tweak பற்றிய பதிவு ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி.

http://ubuntuintamil.blogspot.com/2010/02/ubuntu-tweak.html

முதலில் புதிய ubuntu tweak நிறுவ கீழ்கண்ட கட்டளைகளை டெர்மினலில் இட வேண்டும்.

sudo add-apt-repository ppa:tualatrix/ppa

sudo apt-get update

sudo apt-get install ubuntu-tweak


ubuntu tweak பயன்படுத்தி பழைய கெர்னல்களை நீக்கிவது பற்றி பார்ப்போம்.

முதலில் Applications->System tools->ubuntu tweak செல்ல வேண்டும்.



மேலே உள்ளது போல் விண்டோ வரும். அதில் Clear Kernels என்ற பொத்தனை அழுத்தவேண்டும்.


மேற்கண்ட விண்டோ வரும். பின்னர் Unlock பொத்தானை அழுத்த நம்முடைய login கடவுச்சொல் கேட்கும்.


இதில் பழைய கெர்னல்களை தேர்வு செய்து cleanup பொத்தானை அழுத்தினால் பழைய கெர்னல்கள் நீக்கப்பட்டுவிடும்.