Pages

Wednesday, February 10, 2010

உபுண்டுவில் ubuntu tweak

உபுண்டுவில் ubuntu tweak என்பது நாம் செய்யக்கூடிய அனைத்து settings, install, packages, ppa,source editor போன்ற வேலைகளுக்கு வேறுவேறு menuவிற்கு செல்லாமல் ஒரே இடத்தில் அவை அனைத்தும் கிடைப்பது.

இதற்கு ubuntu tweak 0.5.0 தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் applications->system tools->ubuntu tweak செல்ல வேண்டும்.

இதில் 5 பிரிவுகள் உண்டு
1.applications

இந்த பிரிவில் நாம் நிரல்களை நிறுவலாம், தேவையில்லாத நிரல்களை நீக்கலாம்,நமக்கு தேவையான ppa சேர்க்கலாம்,software source சென்று நாம் ஏற்கனவே சேர்த்திருந்த ppa க்களை edit செய்யலாம் மற்றும் update manager செல்லாமல் update செய்திடலாம்.
2.startup

உபுண்டு ஆரம்பிக்கும் போது எந்த எந்த நிரல்கள் அதாவது startup ல் தேவையோ அதை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும், file manager, panel போன்றவறிற்கான அமைப்புகளை செய்திடலாம்.
3.desktop

இதில் compiz அமைப்புகள், desktop icon அதாவது home folder,network icon போன்றவற்றை அமைக்கலாம், gnome settings, windows manager போன்றவற்றை அமைக்கலாம்.
4.personal

இதில் default folders, நாம் நிறுவும் scriptகளை காண முடியும், templates மற்றும் shortcut key க்களை அமைக்கவோ அல்லது நீக்கவோ முடியும்.
5.system

இதில் advanced power settings, computer details இதில் நம்முடைய host nameஐ மாற்ற முடியும்,file type இங்கு பல்வேறு கோப்புகளை இயக்கும் நிரல்கள் இருக்கும் இதை மாற்றம் செய்ய முடியும்,nautilus settings மற்றும் security related (ஒரு சில) அமைப்புகளை அமைக்க் முடியும்.

மேலும் சில படக்காட்சிகள்





இதில் எளிதாகவும் விரைவாகவும் பல பணிகளை செய்ய முடிகிறது.

1 comment:

DR said...

நான் தங்களுடைய பதிவை தினமும் படித்துக்கொண்டு இருக்கிறேன். தினசரி என்னால் பின்னூட்டம் இட முடியாது. இருந்தாலும் நீங்கள் இந்த சேவையை தொடர வேண்டுகின்றேன்.