Pages

Friday, January 28, 2011

உபுண்டு மேசைமீது உபுண்டுவை பற்றி டிப்ஸ் தோன்ற

உபுண்டு மேசைமீது உபுண்டு பற்றிய டிப்ஸ்க்களை தோன்ற வைக்க முடியும். எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை என்று அமைக்க முடியும். இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும்.

பின்னர்

Applications->Accessories->ubuntu tips appelet தேர்ந்தெடுத்தால் ஒரு சிறிய ஐகான் டாப் பேனலில் தோன்றும்.





இந்த ஐகான் மீது இடது சொடுக்க வரும் விண்டோவில் எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை டிப்ஸ் வரவேண்டும் என்பதை அமைக்கலாம்.


பின்னர் திரையின் வலது மூலையில் உபுண்டு பற்றிய டிப்ஸ் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை தோன்றும்.




Wednesday, January 26, 2011

உபுண்டுவில் libreoffice 3.3.0 stable version



உபுண்டுவில் libreoffice 3.3.0 stable version இப்போது வெளிவந்துள்ளது. இதனை PPA மூலம் நிறுவிக்கொள்ளலாம். இதை பற்றி ஏற்கனவெ ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.


இது பற்றி மேலும் அறிய கீழ்கண்ட சுட்டிகளை பார்க்கவும்.

தரவிறக்கி நிறுவிக்கொள்ள
சுட்டி 1

இது பற்றிய அறிவிப்பை காண
சுட்டி 2



Monday, January 24, 2011

உபுண்டுவில் screensaver ஐ எளிய வழியில் enable/disable செய்ய

உபுண்டுவில் நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துகொண்டிருக்கும் போது திரை திடீரென்று மங்கி பின்னர் screensaver ஒட ஆரம்பிக்கும். எனவே மீண்டும் ஏதேனும் ஒரு கீயை அழுத்தினால் மட்டுமே மீண்டும் திரைப்படத்தை காண இயலும்.

இன்னோரு வழியில் system->preference->power management சென்று screensaver ஐ disable செய்துவிட்டுதான் திரைப்படத்தை காண வேண்டியிருக்கும்.

அப்படியில்லாமல் இதற்கு ஒரு மாற்றாக டாப் பேனலில் ஒரு சிறிய ஐகான் மூலம் enable/disable செய்ய முடியும்.

டாப் பேனலில் கர்சரை வைத்து வலது சொடுக்கி add to panel தேர்ந்தெடுத்து வரும் விண்டோவில் Inhibit applet தேர்ந்தெடுத்து close பொத்தானை அழுத்தி வெளியேற வேண்டும்.


இப்போது டாப் பேனலில்


ஐகான் மீது கர்சரை வைத்து கிளிக் செய்தால் screen saver disable ஆகிவிடும்.


இப்போது திரைப்படத்தை எந்தவித இடையூறுமின்றி பார்க்க முடியும்.

Saturday, January 22, 2011

உபுண்டுவில் firestarter(firewall) தானாக ஆரம்பிக்க

உபுண்டுவில் firstarter நிறுவி அதனை பூட் ஆகும்போதே ஆரம்பிக்க வைக்க முடியும்.


முதலில் System->administration->synaptic package manager சென்று அதில் search boxல் firestarter என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.




பின்னர் system->administration->firestarter சென்றால் settings முதலில் அமைத்துகொள்ள வேண்டும். பின்னர் இதன் ஐகான் டாப் பேனலில் தெரியும்.


மேலே உள்ள படத்தில் உள்ளவாறு வரும். பின்னர் அதன் வழிக்காட்டுதலில் அமைப்புகளை அமைக்க வேண்டும். இப்போது firestarter icon top penal ல் இருக்கும். ஆனால் கணினி மீளதுவங்கும் போது இந்த நிரலை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அப்படியில்லாமல் கணினி மீளதுவங்கும்போதே நிரலை ஆரம்பிக்க கீழ்கண்ட வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo visudo -s

மேற்கண்ட இந்த கட்டளையானது /etc/sudoers என்ற கோப்பினை திறக்கும். இந்த கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்த்துகொள்ள வேண்டும்.

username ALL= NOPASSWD: /usr/sbin/firestarter இதில் username அவரவர் உபுண்டு பயனாளரின் பெயராகும். பின்னர் control+o அழுத்தினால்

File Name to Write: /etc/sudoers.tmp என்று வரும் இதில் எண்டர் கீயை அழுத்தி பின்னர் control+x பொத்தான்களை அழுத்தினால் நாம் சேர்த்தது செமிக்கப்பட்டுவிடும்.

பின்னர் System->preferences->startup application சென்று add பொத்தானை அழுத்தி வரும் விண்டோவில்

Name->Firestarter
Command->sudo firestarter --start-hidden என்று தட்டச்சு செய்து save பொத்தானை அழுத்தி செமித்துகொள்ள வேண்டும். பின்னர் கணினியை மீளதுவங்க firestarter துவங்கி இருப்பதை காணலாம்.

உபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான சின்னம். "₹"

உபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான சின்னம் எப்படி வரவழைப்பது என்பது பற்றி பார்ப்போம். இந்த பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

இப்போது ubuntu font family ஐ நிறுவினால் போதும் எந்த எழுத்துருவையும் தரவிறக்கி நிறுவ வேண்டியதில்லை.

டெர்மினலில்

sudo apt-get install ttf-ubuntu-font-family

என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு libreoffice writter திறந்து அதில் எந்த எழுத்துருவை வேண்டுமானலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பின்னர் கீழ்கண்ட கீக்களை ஒரு சேர அழுத்தி எண்டர் கீயை அழுத்த சின்னம் வந்துவிடும்.

control+shift+u+2+0+b+9 ஆகிய கீக்களை அழுத்த வேண்டும்.



ஒரு html கோப்பில் சேர்க்க வேண்டுமானல் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.



மேலும் இதை பற்றி தெர்ந்துகொள்ள இந்த சுட்டியை பார்க்கவும்.

Friday, January 21, 2011

உபுண்டுவில் floppy disk

உபுண்டு லினக்ஸ் என்று இல்லாமல் இன்று floppy disk மறைந்தே போய்விட்டது. ஆனாலும் இன்னமும் பலர் உபயோக்கிறார்கள். இந்த floppy disk உபுண்டுவில் சில சமயம் mount ஆகமால் இருக்கும்.


floppy disk ன் முக்கிய கோப்புகள் /media/ மற்றும் /etc/ என்னும் இந்த இரு அடைவுகள் தான் முக்கியமானது.


/media/ என்ற அடைவினுள் /floppy0/ என்ற அடைவு இல்லையேன்றால் நாம் உருவாக்கிகொள்ள முடியும்.

டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo mkdir /media/floppy0 என்று தட்டச்சு செய்தால் உருவாகிவிடும்.

பின்னர் /etc/ என்ற அடைவினுள் இருக்கும் fstab என்ற கோப்பினை திறந்து கொள்ள வேண்டும்.

டெர்மினலில்

sudo gedit /etc/fstab என்று தட்டச்சு செய்தால் கோப்பு திறந்து கொள்ளும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்து செமித்து வெளியேற வேண்டும்.

/dev/fd0 /media/floppy0 auto rw,user,noauto,exec,utf8 0 0

கணினிய மீளதுவங்கினால் floppy drive mount ஆவதை பார்க்கலாம்.

Monday, January 17, 2011

உபுண்டு nautilus sidepane ஐ வண்ணத்தில் மாற்ற

உபுண்டுவில் nautilus sidepaneஐ  வண்ணத்தில் பார்க்க முடியும்.



இதற்கு முதலில் .gtkrc-2.0  என்னும் கோப்பாகும். இந்த கோப்பு மறைக்கப்பட்ட கோப்பாகும். இந்த கோப்பினை  பார்க்க home அடைவினுள் சென்று control+H  என்னும் பொத்தான்களை  ஒருசேர அழுத்த காண முடியும்.

இந்த கோப்பினை  திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை  சேர்த்து செமித்து வெளியேற வேண்டும்.


  style "nautilus-sidepane"
    {
        GtkTreeView::even_row_color   = "#FFEFD5"
    }

    widget_class "*NautilusSidePane*" style "nautilus-sidepane"




பின்னர் கணினியை  மீளதுவங்கினால் nautilius sidepane  வண்ணத்தில் தெரியும்.







கோப்பில் கலர் தேர்வு செய்ய

GtkTreeView::even_row_color   = "#FFEFD5" என்ற வரியில் உள்ள "#FFEFD5"   என்பதனை  மாற்ற வேண்டும்.  இந்த கோடை காண gcolor2  என்ற நிரலை  ubuntu software centerல் தேடி நிறுவிக்கொள்ளலாம்.

இந்த நிரலை  இயக்க Applications->Graphics->Gcolor2  செல்ல வேண்டும். அதிலிருந்து கலரின் பெயரினை  தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


Saturday, January 15, 2011

உபுண்டுவில் பல்வேறு வீடியோ கோப்புகள் default ஆக vlcயில் திறக்க

உபுண்டுவில் வீடியோ கோப்புகளை திறக்க கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்தால் totem movie player ல் தான் இயங்கும். இதை மாற்றி vlcயில் திறக்க வைக்க முடியும்.

இதற்கு கீழ்கண்ட இரண்டு கோப்புகள் உதவுகிறது.

1. /.local/share/applications/mimeapps.list இந்த கோப்பு home அடைவினுல் மறைக்கப்பட்ட கோப்பாகும். home அடைவிற்கு சென்று control+H பொத்தான்களை ஒருசேர அழுத்தினால் மறைக்கப்பட்ட கோப்புகள் மற்றும் அடைவுகள் தெரியும்.

2./usr/share/applications/defaults.list இந்த கோப்பில் தான் எந்த கோப்புகள் எந்த நிரல் மூலம் திறக்கும் என்ற செய்தி இருக்கும்.

இப்போது டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து வீடியோ கோப்புகள் திறக்கும் நிரல்களை பார்க்கலாம்.

cat /usr/share/applications/defaults.list | grep video




மேலே உள்ள படத்தில் காணப்படும் வரிகளை mimeapps.list கோப்பினுள் சேர்த்துவிட்டு totem என்பதனை vlc என்று மாற்றி விட்டால் போதும்.

இதற்கு முன் mimeapps.list என்னும் கோப்பினை ஒரு backup எடுத்து கொள்வது நல்லது.

cp ~/.local/share/applications/mimeapps.list ~/.local/share/applications/mimeapps.list.back

என்று டெர்மினலில் தட்டச்சு செய்தால் backup உருவாகிவிடும்.

பின்னர் டெர்மினலில்

cat /usr/share/applications/defaults.list | grep video >> /.local/share/applications/mimeapps.list

என்று தட்டச்சு செய்தால் mimeapps.list னுள் வீடியோ சம்பந்தப்பட்ட வரிகள் சேர்ந்துவிடும். இந்த கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்து திறந்து அதில் search->replace சென்று

search for ->totem
replace with -> vlc என்று தட்டச்சு செய்து replace பொத்தானை அழுத்தினால் totem என்பதற்கு பதில் vlc என்று மாறிவிடும்.


பின்னர் சேமித்து வெளியேற வேண்டும்.

இப்போது வீடியோ கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்தால் totemக்கும் பதில் vlc யில் கோப்புகள் ஒடதுவங்கும்.

இதே போல் ஆடியோ கோப்புகளையு செயல்படுத்த முடியும்.

உபுண்டு preferred applicationsல் vlc

உபுண்டு system->preferences->preferred applicatioன்->multimedia சென்றால் அதில் default ஆக rhythombox மற்றும் totoem ஆகிய இரண்டு மட்டும் இருக்கின்றன. அதில் vlc யை எப்படி கொண்டு வருவது பற்றி பார்ப்போம்.



இதற்கான கோப்பு

/usr/share/gnome-control-centre/default-apps/ என்ற அடைவினுள்தான் இருக்கும்.

எனவே இந்த அடைவினுள் vlc.xml என்ற கோப்பினை உருவாக்கி அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட்டால் போதும். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து ஒரு காலி கோப்பினை உருவாக்கி கொள்ளவேண்டும்.

sudo gedit /usr/share/gnome-control-centre/default-apps/vlc.xml



<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!DOCTYPE default-apps SYSTEM "gnome-da-list.dtd">
<default-apps>
<media-players>
<media-player>
<name>VLC</name>
<executable>vlc</executable>
<command>vlc</command>
<icon-name>vlc</icon-name>
<run-in-terminal>false</run-in-terminal>
</media-player>
</media-players>
</default-apps>


மேற்கண்ட வரிகளை தட்டச்சு செய்து செமித்து வெளியேறவேண்டும்.

இப்போது System->preferences->prefered applications->multimedia சென்றால் vlc இருப்பதை பார்க்கலாம்.





Friday, January 14, 2011

உபுண்டுவில் PPA Manager

உபுண்டுவில் PPA க்களை தேட/சேர்க்க/நீக்க பயன்படும் ஒரு நிரல் Y PPA Manager ஆகும். இந்த நிரலை நிறுவுவதற்கு கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:webupd8team/y-ppa-manager
sudo apt-get update
sudo apt-get install y-ppa-manager

இந்த நிரலானது PPA க்களை உடனடியாக தேடி தந்துவிடும். உடனடியாக நம்முடைய software sourcesல் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த நிரலை இயக்க Applications->System Tools->YPPA Manager செல்ல வேண்டும்.


இதில் 6 பகுதிகள் உள்ளது.

1.Add a PPA இதில் நமக்கு தேவையான நிரல்களின் PPA க்களை சேர்த்துக்கொள்ளலாம்


2.Remove a PPA இதில் நமக்கு தேவையில்லாத PPA க்களை நீக்க்விடலாம்.
3.List packages in a PPA enabled on your computer. நம்முடைய கணினியில் உள்ள PPA க்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
4.Purge a PPA இதில் PPA க்களை நம்முடைய software sourceல் இருந்து முற்றிலும் நீக்கிவிடலாம்.
5.Search all launchpad PPAs இதில் நமக்கு தேவையான நிரல்களின் பெயரை கொடுத்தால் PPA க்கள் வரிசையாக வந்துவிடும். அதில் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


இதில் உதாரணமாக vlc என்று தட்டச்சு செய்து OK பொத்தானை அழுத்தினால்





இதில் நமக்கு தேவையான PPA வை தேர்ந்தெடுத்து Add selected PPA அழுத்தினால் நம்முடைய software source ல் சேர்ந்துவிடும்.

இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த சுட்டியை பார்க்கவும்.

Wednesday, January 12, 2011

உபுண்டு கணினியில் நடக்கும் எல்ல processக்களையும் காண ஒரு ஸ்கிரிப்ட்

உபுண்டு கணினியில் நடக்கும் எல்ல process க்களையும் டெர்மினலில் காண ஒரு ஸ்கிரிப்ட். முதலில் டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொள்ள அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து செமித்து வெளியேறவேண்டும்.

sudo gedit process.sh

#!/bin/bash
# Write a shell script to display the process running on the system for every
# 30 seconds, but only for 3 times.
# -------------------------------------------------------------------------
#
# for loop 3 times
for r in 1 2 3
do
#see every process on the system
echo "**************************** x^x^x ****************************"
ps -e
echo "**************************** x^x^x ****************************"
#sleep for 30 seconds
sleep 3
# clean
done

இந்த கோப்பின் பெயர் process.sh என்று நான் பெயர் வைத்துள்ளேன். அவரவர் விருப்பப்படி வைத்துக்கொள்ளலாம்.

இந்த ஸ்கிரிப்டை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x process.sh என்று தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் டெர்மினலில்

./process.sh என்று தட்டச்சு செய்தால் கணினியில் இயங்கி கொண்டு இருக்கும் எல்லா process க்களையும் திரையில் காணலாம்.

Tuesday, January 11, 2011

உபுண்டுவில் நம்முடைய வலைப்பூவின் rss க்களை திரையில் ஒட வைக்க

உபுண்டுவில் நம்முடைய வலைப்பூவின் rss க்களை திரையில் ஒட வைக்க முடியும். இதற்கு இந்த சுட்டியிலிருந்து deb கோப்பினை தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும்.


பின்னர் System->preferences->startup applications->start programs சென்று add பொத்தனை அழுத்த வரும் விண்டோவில் கீழ்கண்ட வாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

Name->RSS feed reader
Command->news

என்று தட்டச்சு செய்து save பொத்தானை அழுத்தி வெளியேறி பின்னர் close பொத்தானை அழுத்த வேண்டும். பின்னர் கணினியை மீளதுவங்க முதலில் ஒடுவது bbc யின் செய்திகள் தான்.

பின்னர் இடது ஒரத்தில் இருக்கும் கேள்வி குறி மீது கர்சரை வைத்து கிளிக் செய்ய வரும் விண்டோவில் File->Open RSS feed தேர்ந்தெடுக்க வேண்டும்.




Enter new URL ல் நம்முடைய வலைப்பூவின் rss linkனை காப்பி செய்துவிட வேண்டும். பின்னர் ok பொத்தானை அழுத்த கணினி திரையில் மேல்பகுதியில் நம்முடைய வலைப்பூவின் rss க்கள் ஒடுவதை பார்க்கலாம்.

பின்னர் Edit->preferences சென்றால் எழுத்துரு மற்றும் அதன் அளவை மாற்றிக்கொள்ளலாம். மேலும் பல வலைப்பூவின் rss லிங்கினையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நண்பர் சூர்யாக்கண்ணன் அவர்களின் வலைப்பூவின் rss க்களை கீழே காணலாம்.

உபுண்டுவில் caps/numeric/scrol lock ஆகிய கீக்களை அழுத்தும் போது notification வர

உபுண்டுவில் caps/numeric/scroll கீக்களை அழுத்தும்போது திரையின் வலது ஒரத்தில் notification வரவழைக்க முடியும். இதற்கு compiz config settings manager மூலம் செயல்படுத்த முடியும்.



1. முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து compizconfig settings manager ஐ நிறுவிக்கொள்ள வேண்டும்.

sudo apt-get install compizconfig-settings-manager

2.பின்னர் notifyosdஐ மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

sudo add-apt-repository ppa:leolik/leoli
sudo apt-get update && sudo apt-get upgrade
sudo apt-get install libnotify-bin
pkill notify-osd

3.இந்த சுட்டியிலிருந்து ஸ்கிரிப்டை தரவிறக்கி அதை home அடைவினுள் scripts என்னும் அடைவினுள் சேமித்துக்கொள்ளவேண்டும். இந்த ஸ்கிரிப்டை இயங்கு நிலையில் வைக்க ஸ்கிர்ப்டில் வலது சொடுக்கி வரும் விண்டோவில் properties->permission சென்று Execute நேரில் உள்ள பெட்டியைல் டிக் செய்திடவேண்டும்.


4.System->preferences->compizconfig settings manager சென்று அதில் General ஆப்ஷனில் உள்ள Commands enable செய்து அதில் இரட்டை கிளிக் செய்ய வேண்டும். வரும் விண்டோவில் உள்ள command line களில் கீழ்காணும் கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

command line 0 -> /home/username/scripts/lock_keys caps
command line 1 -> /home/username/scripts/lock_keys num
command line 2 -> /home/username/scripts/lock_keys scrl


பின்னர் அதில் key bindings பகுதிக்கு செல்ல வேண்டும்.




இதில் run command 0விற்க்கு நேரே உள்ள பெட்டியில் disable என்று இருக்கும். அதில் கர்சரை வைத்து கிளிக் செய்ய வரும் விண்டோவில் enable டிக் செய்திட கீழ்காணும் விண்டோ வரும்.


இதில் grab key combination கிளிக் செய்துவிட்டு commands பகுதியில் command line 0 வில் என்ன கட்டளை கொடுத்தோமோ அதாவது /home/username/scripts/lock_keys caps என்று கொடுத்து இருப்போம் அதனால் key board உள்ள caps lock பொத்தானை அழுத்தி ok பொத்தானை அழுத்தி வெளியேறவேண்டும். இதே போல் மற்ற கீக்களையும் அதாவது run command 1 மற்றும் run command 2லும் செயல்படுத்த வேண்டும்.

இப்போது caps/numerical/scroll கீக்களை அழுத்த திரையின் வலது ஒரத்தில் notification வருவதை பார்க்கலாம்.

Sunday, January 9, 2011

உபுண்டு நெருப்பு நரி about:config பற்றிய ஒரு சிறு விளக்கம்.

உபுண்டு நெருப்பு நரியை பயன்படுத்துவோர்கள் முதலில் செய்ய வேண்டியது இரண்டு முக்கிய குறிப்புகள்

  1. home அடைவினுள் இருக்கும் .mozilla என்ற மறைக்கப்பட்ட அடைவினை ஒரு backup எடுத்துகொள்ள வேண்டும்.
  2. நெருப்பு நரி முகவரி பெட்டியில் about: config தட்டச்சு செய்து உள்ள போகும் போது என்ன மாற்றம் செய்ய போகிறோமொ அதை முதலில் அதன் default மதிப்பு மற்றும் மாற்றம் செய்ய போகும் வரிகளை ஆகியவற்றை தனியாக ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.




about:config ல் இருக்கும் அனைத்து அமைப்புகளும் home அடைவினுள் இருக்கும் ./mozilla என்ற மறைக்கப்பட்ட அடைவினுள் இருக்கும் /firefox/xxx.default/prefs.js என்ற கோப்பில் இருக்கும். இதில் xxx.default என்ற அடைவானது .mozilla/firefox/profiles.ini என்ற கோப்பினுள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.



profile.ini என்ற கோப்பினுள் path=xxx.default என்ற அடைவு தான் நம்முடைய profile ஆகும்.

இன்றையதினம் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சிக்கலை பற்றி பார்ப்போம். about:config பகுதிக்குள் நுழைந்து அதில் கீழ்கணட வரியில் தவறுதாலாக செய்த சிறு மாற்றம் தான் சிக்கலுக்கு காரணம்.


மேற்கண்ட படத்தில் layout.css.devPixelsPerPx என்பதன் மதிப்பு -1 என்று இருக்க வேண்டும். தவறுதாலாக 96 என்று மாற்றி விட நெருப்பு நரியில் கீழ்கண்ட வாறு தெரிய ஆரம்பித்தது.



இதை சரிசெய்ய home அடைவினுள் இருக்கும் .mozilla/firefox/xxx.default/prefs.js என்ற கோப்பினை திறந்து அதில் layout.css.devPixelsPerPx அதன் மதிப்பு 96 ஆக இருக்கும்.


இந்த 96 என்பதை -1 என்று மாற்றி சேமித்து வெளியேற நெருப்பு நரி மீண்டும் நல்ல முறையில் இயங்கியது.இந்த கோப்பினை திறக்கவோ அல்லது சேமிக்கவோ டெர்மினல் செல்ல தேவையில்லை.


இப்போது நெருப்பு நரி திறக்க நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தது.

Saturday, January 8, 2011

உபுண்டுவில் librecad

உபுண்டுவில் 2D வரைபடங்கள் வரைய உதவும் ஒரு நிரல் தான் librecad என்பது. இது ஒரு open source மென்பொருளாகும். இதன் பழைய பெயர் CADuntu என்பதாகும். இந்த நிரலை நிறுவ PPA உதவுகிறது. இதில் .dxf கோப்புகளை படிக்க,எழுத மற்றும் உருவாக்க முடியும்.

கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:showard314/ppa
sudo apt-get update
sudo apt-get install librecad

இந்த நிரலை செயல்படுத்த Applications->Graphics->libreCAD செல்ல வேண்டும்.


OK பொத்தானை அழுத்தியவுடன் நிரல் செயல்பட துவங்கும்.