உபுண்டுவை நேரடியாக டெர்மின்லிருந்து ஆரம்பிக்க முடியும். முதலில் இதன் கோப்பினை பற்றி பார்ப்போம்.
/boot/grub/grub.cfg என்பதாகும். இந்த கோப்பானது sudo update-grub என்னும் கட்டளையினால் தானாகவே உருவாகும் கோப்பாகும். எனவெ இந்த கோப்பினை கையாளும்போது கவனம் தேவை. இந்த கோப்பினை திறக்க முதலில் நாம் கொடுக்க வேண்டிய கட்டளை
sudo chmod +w /boot/grub/grub.cfg இந்த கட்டளை கொடுத்தால்தான் எடிட் செய்ய முடியும். பின்னர்
sudo gedit /boot/grub/grub.cfg என்று கட்டளையிட்டு கோப்பினை திறந்து கொள்ள வேண்டும். இதில் செய்ய வேண்டிய மாற்றங்களை கீழே உள்ளது போல் செய்து கொள்ள வேண்டும்.
menuentry 'Ubuntu, with Linux 2.6.35-27-generic' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
recordfail
insmod part_msdos
insmod ext2
set root='(hd0,msdos8)'
search --no-floppy --fs-uuid --set c482612b-58ee-4c33-97d5-caa2c85655bc
linux /boot/vmlinuz-2.6.35-27-generic root=UUID=c482612b-58ee-4c33-97d5-caa2c85655bc ro quiet splash
initrd /boot/initrd.img-2.6.35-27-generic
}
மேலே உள்ளவாறு இருக்கும் இடத்தை தேடி இது நாம் default ஆக உபுண்டு திறக்கும் மெனுவாகும் அதில் கீழ்கண்டவாறு மாற்றி கொள்ள வேண்டும்.
menuentry 'Ubuntu, with Linux 2.6.35-27-generic(command mode)' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
recordfail
insmod part_msdos
insmod ext2
set root='(hd0,msdos8)'
search --no-floppy --fs-uuid --set c482612b-58ee-4c33-97d5-caa2c85655bc
linux /boot/vmlinuz-2.6.35-27-generic root=UUID=c482612b-58ee-4c33-97d5-caa2c85655bc ro text
initrd /boot/initrd.img-2.6.35-27-generic
}
சேமித்து வெளியேறவேண்டும். கணினியை மீளதுவங்க login செய்ய சொல்லி கேட்கும். username password கொடுத்தால் டெர்மினலில் ஆரம்பிக்கும்.
இதனை desktopற்கு கொண்டுவர அங்கேயே
இதனை desktopற்கு கொண்டுவர அங்கேயே
sudo /etc/init.d/gdm start என்ற கட்டளையை கொடுக்க வேண்டும்.
மீண்டும் desktop லிருந்து ஆரம்பிக்க டெர்மினலில்
sudo update-grub என்ற கட்டளை கொடுத்தால் புதிய grub.cfg உருவாகிவிடும்.
No comments:
Post a Comment