Pages

Tuesday, March 1, 2011

உபுண்டு முனையத்தில் web pageக்களை pdf கோப்பாக மாற்ற

உபுண்டுவில் web pageனை pdf கோப்பாக மாற்ற உதவும் நிரல் wkhtmltopdf. இதனை நிறுவ டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட வேண்டும்.

sudo apt-get install wkhtmltopdf

wkhtmltopdf -help என்று தட்டச்சு செய்தால் உதவிப்பக்கம் வரும்.

இணையப்பக்கத்தினை pdf கோப்பாக மாற்ற டெர்மினலில்

wkhtmltopdf www.google.com google.pdf என்று கட்டளையிட வேண்டும்.

இதே இணைய பக்கம் landscape வடிவில் வர

wkhtmltopdf -O www.google.com google.pdf என்று கட்டளையிட வேண்டும்.

இந்த கட்டளையானது துணை டொமன்களில் வேலை செய்யாது. அதாவது ubuntuintamil.blogspot.com ல் வேலை செய்யாது. suthanthira-menporul.com பக்கத்தை pdf கோப்பாக மாற்றிவிடும்.

இணையப்பக்கத்தை A3 A4 அளவு தாளில் கொண்டுவர

wkhtmltopdf -s A4 www.google.com google.pdf என்று கட்டளையிட வேண்டும்.

இப்போது pdf கோப்பாக மாற்றப்பட்ட ஒரு கோப்பினை கீழே காணலாம்.


2 comments:

Anonymous said...

அது ஏப்படி கொஞ்சம் கூட இடைவேளி இல்லாமல் பதிவு, செய்கிறீர்கள் ஐயா. கிரேட்

arulmozhi r said...

நன்றி pakkatechies