
Internal ip address network icon மீது கர்சரை வலது சொடுக்க வரும் விண்டோவில் பார்க்க முடியும்.

இதற்கு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.
sudo apt-get install giplet
பின்னர் டாப் பேனலில் கர்சரை வைத்து வலது சொடுக்க add to panel->Giplet தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது ஐபி முகவரி தெரியும். இதன் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் preferences தேர்ந்தெடுத்தால் எத்தனை நிமிடங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கலாம்.


இந்த நிரலின் கோப்பு /usr/lib/giplet/giplet என்ற கோப்பாகும். இந்த கோப்பில் ஒரு சிறு மாற்றம் செய்தேன். பின்னர் கணினியை மீளதுவங்கியபோது பேனல் எதுவும் மேசைமீது வரவில்லை.
பின்னர் pinguy os நிறுவியிருந்ததால் அதில் சென்று இந்த கோப்பினை சரிசெய்தபின்னர் உபுண்டு வேலை செய்ய ஆரம்பித்தது.


0 கருத்துரைகள்:
Post a Comment