Pages

Tuesday, March 29, 2011

உபுண்டு கணினியை கண்காணிக்க logwatch

உபுண்டுவில் logwatch எனப்படும் நிரல் நம்முடைய கணினியை கண்கானிப்பதற்கு அதாவது நம் கணினி நம்முடைய கணினி அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இரண்டு அல்லது மூன்று இருக்கலாம். அதில் நடப்பவற்றை கண்கானிக்க தினமும் கணினியை வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லாமல் அதனை நம்முடைய இமெயில் முகவரிக்கு வருமாறு செய்ய முடியும்.

இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும்.

sudo apt-get install logwatch

இப்போது மீண்டும் டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்து logwatch.conf என்னும் கோப்பினை திறந்து கொள்ளவேண்டும்.

sudo gedit /usr/share/logwatch/default.conf/logwatch.conf

மேற்கண்ட கோப்பில் MailTo என்னும் இடத்தில் நம்முடைய இமெயில் முகவரியை தட்டச்சு செய்ய வேண்டும்.

MailTo = xxxxxxx@gmail.com என்றவாறு தட்டச்சு செய்து சேமித்து வெளியேற வேண்டும்.



இப்போது எனக்கு வந்த இமெயில்களை காணலாம்.


இதற்கு என்னுடைய gmail கணக்கினை பயன்படுத்தினேன்.

1 comment:

Saran said...

Please post about how to configure gmail in thunderbird