Pages

Monday, March 7, 2011

உபுன்டு grub menuவில் system rescue option கொண்டு வருதல்

உபுண்டு grub menuவில் system rescue ஆப்ஷனை கொண்டு வரமுடியும். இந்த ஆப்ஷன் கணினி இயங்க மறுத்தாலோ rescue ஆப்ஷன் பயன்படும். system rescue ஆனது iso கோப்பாக தரவிறக்கம் செய்து அதனை சிடியில் எரித்துதான் பயன்படுத்த வேண்டியிருந்தது.

1. இந்த சுட்டியிலிருந்து iso கோப்பினை தரவிறக்கிகொள்ள வேண்டும்.

2./boot/sysrcd/ என்ற அடைவினை உருவாக்கிகொள்ள வேண்டும்.

sudo mkdir /boot/sysrcd

3.தரவிறக்கப்பட்ட iso கோப்பினை /boot/sysrcd/ அடைவிற்கு காப்பி செய்துகொள்ள வேண்டும்.

sudo mv systemrescuecd*.iso /boot/sysrcd/

4.பின்னர் /etc/grub.d/50_sysrcd என்ற கோப்பினை திறந்துகொள்ள வேண்டும்.

sudo gedit /etc/grub.d/50_sysrcd இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து சேமித்து வெளியேறிவிடவேண்டும்.

#!/bin/sh

# Search for System Rescue CD iso file in /boot and add it as boot-entry.

for iso in $(find /boot -name systemrescuecd*.iso)
do
isofile=`echo $iso`
version=`echo $iso | cut -d "-" -f 3 | cut -d "." -f 1,2,3`
echo "Found SystemRescueCD image: ${iso}" >&2
cat << EOF
menuentry "SystemRescueCd ${version}" {
loopback loop ${isofile}
linux (loop)/isolinux/rescuecd isoloop=${isofile}
initrd (loop)/isolinux/initram.igz
}
EOF
done

பின்னர் இந்த கோப்பினை இயங்கு நிலையில் வைக்க கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo chmod a+x /etc/grub.d/50_sysrcd

5. டெர்மினலில்

sudo update-grub என்று தட்டச்சு செய்தால் grub menuவில் ஆப்ஷன் வந்துவிடும்.


No comments: