Pages

Sunday, March 20, 2011

உபுண்டு libreofficeல் spalash screen

உபுண்டு libreoffice spalash screen ஐ வேறு புதிய வடிவில் மாற்றம் செய்ய முடியும்.




மேற்கண்டவாறு படங்கள் வருவதற்கு இந்த சுட்டியிலிருந்து tar.gz கோப்பினை தரவிறக்கிக்கொள்ள வேண்டும்.

மேசைமீது தரவிறக்கி விரித்துகொள்ள வேண்டும். இதில் about.png மற்றும் intro.png என்ற இரண்டு கோப்புகள் இருக்கும். இந்த இரண்டு கோப்புகளையும் /usr/lib/libreoffice/program/ என்ற அடைவினுள் காப்பி செய்துவிடவேண்டும்.

sudo cp *.png /usr/lib/libreoffice/program/

ஏற்கனவே இந்த அடைவினுள் இருந்த about.png மற்றும் intro.png ஆகிய கோப்புகளை backup காப்பி எடுத்துக்கொள்ள வேண்டும்.

sudo cp /usr/lib/libreoffice/program/about.png /usr/lib/libreoffice/program/about.png.back
sudo cp /usr/lib/libreoffice/program/intro.png /usr/lib/libreoffice/program/intro.png.back


இதன் பின்னர் /etc/libreoffice/sofficerc என்ற கோப்பினை திறந்து கொள்ள வேண்டும்.

sudo gedit /etc/libreoffice/sofficerc

இந்த கோப்பினையும் ஒரு backup காப்பி எடுத்துக்கொள்ள வேண்டும்.

sudo cp /etc/libreoffice/sofficerc /etc/libreoffice/sofficerc.back

இதில் இருந்தவற்றை அழித்துவிட்டு கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிட்டு சேமித்து வெளியேறவேண்டும்.

[Bootstrap]
HideEula=1
Logo=1
NativeProgress=true
ProgressBarColor=78,158,1
ProgressFrameColor=45,45,45
ProgressPosition=60,277
ProgressSize=320,6


இப்போது libreoffice சென்றால் மேற்கண்டவாறு spalash screen இருக்கும்.

No comments: