உபுண்டுவில் புகைப்படத்தில் தகவல்களை மறைத்துவைக்கும் நிரல்தான் steghide என்பதாகும். இந்த நிரல் synaptic package managerல் உள்ளது. எளிதாக search செய்து நிறுவிக்கொள்ளலாம். இந்த நிரலை பயன்படுத்துவது மிக எளிதானது.


மேலே உள்ள படத்தில் இரண்டு கோப்புகள் அதாவது ஒன்று படக்கோப்பு இரண்டாவது டெக்ஸ்ட் கோப்பாகும். இந்த டெக்ஸ்ட் கோப்பினை படக்கோப்பில் மறைத்து வைக்க முடியும். படக்கோப்பு jpg வடிவில் இருக்க வேண்டும்.
டெர்மினலில் கீழ்கண்டவாறு கட்டளையிட வேண்டும்.
steghide embed -cf gra.jpg -ef gra.txt
மேற்கண்டவாறு கட்டளையிட்டவுடன் டெர்மினலில்
Enter passphrase: கேட்கும். இங்கு நாம் ஒரு கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும். கொடுத்தவுடன் ReEnter passphrase கேட்கும். திரும்ப அதே கடவுச்சொல்லை கொடுத்தவுடன் டெக்ஸ்ட் கோப்பு படக்கோப்பில் மறைக்கப்படுவிடும்.
இதனை மீண்டும் வெளிகொணர கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் கொடுக்க வேண்டும்.
steghide extract -sf gra.jpg என்று கட்டளை கொடுத்தவுடன்
Enter passphrase கேட்கும். கோப்பினை மறைப்பதற்கு கொடுத்த அதே கடவுச்சொல்லை கொடுத்தவுடன் கோப்பு தனியாக பிரிக்கப்பட்டுவிடும்.

steganography என்பதை பற்றி கேள்விபட்டு இருப்போம். இதனை நாமே செய்து பார்க்க இருக்கும் ஒரு சிறிய மற்றும் எளிமையான நிரல்தான் இது.