உபுண்டுவில் nautilux address barஐ GUI modeலிருந்து text modeற்கு மாற்றுவதை பார்ப்போம். nautilusல் location barல் அடைவுகள் தனிதனியாக தெரியும்.
அதையே கீழ்கண்டவாறு மாற்ற முடியும்.
இதற்கு டெர்மினலில்
gconftool-2 --type=Boolean --set /apps/nautilus/preferences/always_use_location_entry true
என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
மீண்டும் பழைய மாதிரியே வேண்டுமென்றால் true பதிலாக false கொடுக்க வேண்டும்.
gconftool-2 --type=Boolean --set /apps/nautilus/preferences/always_use_location_entry false
இதையே வேறுவிதமாக செய்யலாம். alt+f2 அழுத்தினால் வரும் விண்டோவில் gcont-editor என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தவேண்டும்.
config editor திரையில் வந்தவுடன்
apps->nautilus->preference தேர்ந்தெடுத்து இடது பக்க விண்டோவில் இருக்கும் always_use_location_entryன் எதிரே டிக் செய்துவிட வேண்டும்.
இந்த அமைப்பு தேவையில்லையென்றால் டிக் செய்ததை எடுத்துவிட வேண்டும்.
Tuesday, May 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்களின் அனைத்து பதிப்புகளையும் தவறாமல் படித்து வருகின்றேன்.
உபுண்டு நிறுவிவிட்டேன். அதில் ஒருசில அப்டேட்கள் செய்யும் போது error வருகிறது.
நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல்
----------------------------
"உபுண்டு 9.10 32bit நிரல்கள் அடங்கிய 7 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.200/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செலவு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்."
----------------------------
அதைப் போல்உபுண்டு 10.02 க்கு நிரல்கள் அடங்கிய சிடி கிடைக்குமா...........நான் ருபாய் அனுப்பிவிடுகிறேன்.
உங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.
மிகவும் நன்றி.
//கஜேந்திரன், சிவகாசி
வாருங்கள் கஜேந்திரன் mediubuntu போன்ற repoக்கள் சிலசமயம் இப்படி வருவது உண்டு.
இன்னும் எனக்கு 10.04 டிவிடி வட்டுக்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன்.
நன்றி.
// கஜேந்திரன், சிவகாசி
Post a Comment