மேலே உள்ள படத்தில் -rw-- என்று வரிகள் வருவதை பார்க்கிறோம். அதை பற்றி கீழே கொடுத்துள்ளேன்.
முதலில் ஒரு உதாரணத்திற்கு
- rw- r-- r-- 1 arulmozhi arulmozhi 32564 2010-05-02 15:47 Selection_011.png
இங்கு selection_011.png என்ற கோப்பினை பற்றிப் பார்போம். இதில் மொத்தம் 10 பகுதி உள்ளது.
1.'-' என்பது கோப்பின் அடையாளம். இதுவே 'd' என்று இருந்தால் அடைவை குறிக்கும்.'l' என்று இருந்தால் இணைப்பை குறிக்கும்.
2.'rw-'
3.'r--'
4.'r--'
மேலே 2,3 மற்றும் 4 ஆகியவைகள் கோப்பினை யார் இயக்கலாம் என்பது பற்றி இருக்கும்.அதாவது read,write என்பது பற்றி இருக்கும்.
இதில் 2 என்பது read,write அதாவது இந்த கோப்பினை உருவாக்கியவர் செய்ய முடியும். 3,4 இந்த கோப்பினை படிக்க மட்டும் முடியும்.
5.'1' இந்த பகுதி இந்த கோப்பில் அல்லது அடைவினுள் எத்தனை இணைப்புகள் அல்லது அடைவுகள் இருக்கிறது என்பது பற்றி ஆகும்.
6 மற்றும் 7 இந்த பகுதி இந்த கோப்பிற்கு உரிமையாளர் அல்லது உரிமையாளர்கள் என்பது பற்றி இருக்கும். அதாவது read,write செய்பவர்கள்.
8. இந்த கோப்பின் அளவு பற்றியது ஆகும்.
9.கடைசியாக எப்போது மாற்றம் செய்யப்பட்ட தேதி மற்றும் நேரம்.
10.இந்த பகுதியில் கோப்பின் பெயர் இருக்கும்.
No comments:
Post a Comment