முதலில் இந்த ஸ்கிரிப்டை இயக்குவதற்கு கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் கொடுக்க வேண்டும்.
sudo apt-get install zenity ffmpeg என்று தட்டச்சு செய்து zenity மற்றும் ffmpeg என்ற இரு நிரல்களையும் நிறுவிக்கொள்ளவேண்டும்.
பின்னர் டெர்மினலில் ஸ்கிரிப்டை தரவிறக்க
wget http://raymii.org/cms/content/downloads/easyconverter.sh
sudo chmod +x easyconverter.sh
./easyconverter.sh
என்று ஒவ்வொரு கட்டளையாக கொடுக்க வேண்டும்.

கட்டளை இயங்க ஆரம்பித்ததும் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.

இதில் ok பொத்தானை அழுத்தியதும்.

இங்கு எந்த வடிவத்தை மாற்ற விரும்புகிறோமொ அதை தேர்ந்தெடுத்து ok பொத்தானை அழுத்தவேண்டும்.

இங்கு எந்த அடைவினுள் இருக்கும் பாடல்களை மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து ok அழுத்தவேண்டும்.

இதில் எந்த வடிவமாக மாற்ற விரும்புகிறோமொ அதை தேர்ந்தெடுத்து ok பொத்தானை அழுத்தவேண்டும்.

இங்கு தரத்தை தேர்ந்தெடுத்து ok பொத்தானை அழுத்த வேண்டும்.

நாம் தேர்ந்தெடுத்தது சரி என்றால் lets rock baby பொத்தானை அழுத்த பாடல்கள் மாற துவங்கிவிடும்.

வடிவம் மாற்றப்பட்டு முடிந்தவுடன்

yes, open it பொத்தனை அழுத்தியவுடன் அடைவினை பார்க்கலாம்

எந்த வடிவத்திலிருந்தும் எந்த வடிவத்திற்கும் மாற்றக்கொள்ளலாம். (mp3,ogg,flac,amr)
No comments:
Post a Comment