Pages

Saturday, May 1, 2010

உபுண்டு 10.04 ஒரு பார்வை

புண்டு 10.04 LTS வந்து இரண்டாம் நாள் இது. இது வரையிலான ஒரு பார்வை . இதில் அனைத்து நிரல்களும் புதிய பதிப்பாகவே வந்திருக்கிறது.நிறுவியவுடன் update செய்து நிறுவிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

1.ஒபன் ஆபிஸ்


2.நெருப்பு நரி



3.தண்டர்பேர்டு


4.விஎல்சி


5.ஸ்கைப்


ஸ்கைப் நன்றாக வேலை செய்கிறது. வெப் கேமராவும் நன்றாக ஒத்துழைக்கிறது.

6.ubuntu software centre


ஒரு புதிய வடிவத்தில் 9.10லிருந்து மேம்படுத்தியிருக்கிறார்கள்

7.டெர்மினல்


8.ubuntu software centreல் நிரல் நிறுவுதல்


9.printer


புதியதாக அச்சு இயந்திரம் சேர்க்கப்படவில்லை.

10.Totem


11.rythambox music player


இதை திறக்கும்போதே ubuntu one music store வருகிறது. பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.


11.இதில் செல்பேசியிலிருந்து gprs மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்த எளிதில் முடிகிறது.


12.தமிழ் உள்ளீடும் முறை ibusல் நன்றாக எழுத முடிகிறது.

இந்த 10.04ல் gimp சேர்க்கப்படவில்லை. ubuntu software centreல் இருக்கிறது. நாமே நிறுவிக்கொள்ளவேண்ட்ம். maximum,minimum,close பொத்தான்கள் இடது மூலையில் இருக்கிறது. இப்போது இந்த அமைப்பு பழகிவிட்டது. இதில் ntfs partition அதாவது விண்டோஸ் partition திறக்கும்போது கடவுச்சொல் கேட்பதில்லை.

வேறு சில நிரல்களும் உள்ளன. முக்கியமாக பலர் பயன்படுத்தும் நிரல்கள் இவை. update managerல் top panelல் notification இதில் வருவதில்லை. இதை நாமே வரவழைவத்து கொள்ளலாம்.

குறைகள் தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும்.

14 comments:

இரா.கதிர்வேல் said...

நல்ல பதிவு.சூப்பர் கலக்குறீங்க.கணினியில் உபுண்டு லினக்ஸ் பயன்படுத்தும் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் உங்களினுடைய வலைப்பூ மிகவும் உதவியாக அமையும்.

arulmozhi r said...

நன்றி கதிர்வேல் என் விருப்பமும் அதுதான்

முருகபூபதி said...

மெமரி லீக் பிரச்சினை இருப்பதாக சில இடங்களில் சொல்லி இருந்தார்களே..? சரியாக்கி விட்டார்களா..?

arulmozhi r said...

இன்னும் சரியாகவில்லை.உங்களுக்கு வரும் நாட்களில் ஏதேனும் update வரலாம்

rkajendran2 said...

அன்புள்ள ஆசிரியருக்கு,
நான் உபுண்டு 9.10 வெர்சனை இரண்டு நாட்களுக்கு முன்பு எனது லேப்டாப்பில் நிறுவி விட்டேன்.
மேலும் உபுண்டு 10.04 ஐ சிடியில் பதிந்து விட்டேன்.
அந்த லேப்டாப்பில் எப்படி உபுண்டு 10.04 ஐ ரீஇன்ஸ்டால் செய்வது எப்படி என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
//கஜேந்திரன். சிவகாசி

arulmozhi r said...

கஜேந்திரன் எப்படி 9.10 நிறுவினீர்களோ அப்படிதான் 10.04ம்

Mohaunix said...

hi arulmozhi my question to u " VLC is preinstalled with ubuntu 10". is it MP3 is playable without downloading codecs ????.

arulmozhi r said...

வாருங்கள் mohanunix vlc ubuntu software centreல் இருக்கிறது.எல்லா வகையான வடிவங்களையும் play செய்யும் அருமையான media player நீங்கள் நிறுவிப்பார்த்து சொல்லுங்கள்

வடுவூர் குமார் said...

ஓ! நான் ஆடமேடிக் அப்டேட்க்கு காத்திருக்கலாம் என்றுள்ளேன்.

arulmozhi r said...

வாருங்கள் வடுவூர் குமார் மேம்படுத்துதலைவிட புதியதாகவே நிறுவுவதே நல்லது என்று நினைக்கிறேன்.

Unknown said...

hi arulmozhi .. one of my friend suggest ur blog.. my question is "i am going to install ubuntu 10.04 on my Acer 5740 laptop.. is ubuntu is good for laptop..?"

arulmozhi r said...

// Arul said...

hi arulmozhi .. one of my friend suggest ur blog.. my question is "i am going to install ubuntu 10.04 on my Acer 5740 laptop.. is ubuntu is good for laptop..?"//

வாருங்கள் அருள். உபுண்டு அருமையாக வேலை செய்வதை என் நண்பர்களின் laptop கணினியை பார்த்து இருக்கிறேன்.

VIVEK KUMAR said...

HI.. I am using ubuntu 10.4 desktop edition.. in my laptop acer. i would like to connect to internet using my 3g mobile nokia 2730. i am using bsnl 3g data card

VIVEK KUMAR said...

i am using ubuntu 10.04 desktop edition in my laptop .. i would like to configure internet by using my mobile (nokia 2730 3g) in which i am using bsnl 3g ..sim