Pages

Sunday, May 23, 2010

உபுண்டுவில் skype repository

உபுண்டுவில் skype நிறுவ http://skype.com சென்று தரவிறக்கிதான் நிறுவிக்கொள்வோம். ஆனால் skype repository வந்துள்ளது. இதை நம்முடைய source.listல் சேர்த்துவிட்டால் கணினி update ஆகும்போது தானாகவே update ஆகிவிடும்.

முதலில் டெர்மினலில்

sudo gedit /etc/apt/sources.list என்று தட்டச்சு செய்து கோப்பு திறந்தவுடன் அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவேண்டும்

deb http://download.skype.com/linux/repos/debian/ stable non-free

பின்னர் சேமித்து வேளியேறவேண்டும்.

இதனுடைய கீயை சேர்க்க கீழ்கண்ட வரியை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.

sudo apt-key adv --keyserver pgp.mit.edu --recv-keys 0xd66b746e

இப்போது கீ சேர்ந்துவிடும்.

sudo apt-get update

sudo apt-get install skype என்று தட்டச்சு செய்தால் ஸ்கைப் நிறுவப்பட்டுவிடும்.

System->Administration->Software sources->Other software சென்று பார்த்தால்



இதனுடைய authentication key


1 comment:

Kumaresan Rajendran said...

பகிர்விற்க்கு நன்றி.