login sound கோப்பு /usr/share/sounds/ubuntu/stereo/ என்ற அடைவினுள் இருக்கும். ogg வடிவில் தான் இந்த கோப்புகள் இருக்கும். நமக்கு விருப்பமான பாடலை இந்த ogg வடிவில் மாற்றிக்கொள்ளவேண்டும். இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.
பின்னர் நாம் விரும்பும் பாடலை ogg வடிவில் மாற்றி /usr/share/sounds/ubuntu/stereo/ என்ற அடைவினுள் காப்பி செய்துகொள்ள வேண்டும்.

மேலே உள்ள படத்தில் desktop-login.ogg மற்றும் nan.ogg என்ற ஒலிகோப்புகள் இருக்கின்றன. இப்போது desktop-login பதிலாக nan என்ற கோப்பை மாற்றலாம்.
இதற்கு முதலில்
System->preferences->startup applications->Gnome login sound தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் edit கீயை அழுத்தினால்

இதன் command ல் இருக்கும் வரியான
/usr/bin/canberra-gtk-play --id="desktop-login" --description="GNOME Login" என்பதற்கு பதிலாக
/usr/bin/canberra-gtk-play --id="nan" --description="GNOME Login" என்று மாற்றி save
பொத்தனை அழுத்தவேண்டும். இப்போது கணினியை மீளதுவங்க நாம் அமைத்த பாடலோ அல்லது ஒலியோ ஒலிப்பதை கேட்கலாம்.
மீண்டும் பழைய ஒலியை கேட்க வேண்டுமானால் மீண்டும் பழைய வரிகளை மாற்றிக் கொள்ளலாம்.
6 comments:
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம். நான் உங்கள் ப்ளாக்கை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன்.
உங்களின் சேவை மிகவும் பயனுள்ளது. மிகவும் பாராட்டத்தக்கது. உங்களது சேவை தொடர வேண்டுகிறேன்.
நான் விண்டோசிலிருந்து உபுண்டுக்கு மாற இருக்கிறேன். (நான் 21 ஆண்டுகளாக விண்டோசில் வேலை செய்து வருகிறேன்). முழுவதுமாக உபுண்டுவுக்கு மாறுவதற்காக ஒரு டிரெயிங் எடுக்க விரும்புகிறேன். அதற்காக ஒரு டம்மி உபுண்டு விண்டோசில் இருந்தபடியே நிறுவ முடியுமா...... அதில் ஒருசில நாட்கள் வேலை செய்து கட்டளைகளை புரிந்து கொண்டு பின்னர் ஒரிசினல் உபுண்டுவுக்கு மாறலாம் என்று இருக்கிறேன்...... தயவுசெய்து எனக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்.
உங்களின் இந்த மகத்தான சேவை தொடர வாழ்த்துகிறேன். வரவேற்கிறேன்.
மிகவும் நன்றி.....
கஜேந்திரன், சிவகாசி....
வாருங்கள் கஜேந்திரன் நீங்கள் நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் விண்டோசிலிருந்து உபுண்டு இயக்கி பார்க்க முடியும். அதற்கு தேவை ஒரு உபுண்டு live cd இது உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
http://ubuntu-tam/vasal
http://shipit.ubuntu.com
என்ற இரு தளங்களிலும் பதிவு செய்தீர்கள் என்றால் உங்கள் வீடு தேடி சிடி வந்துவிடும். அதை கணினி cd driveல் வைத்து நிறுவிக்கொள்ளலாம். சிடியை explore செய்தால் wubi.exe என்ற ஒரு கோப்பு இருக்கும். இதுவே install கோப்பு ஆகும். தேவையில்லை என்று நினைத்தால் control panelல் add/remove programme சென்று நீக்கிக்கொள்ளலாம்.
மன்னிக்கவும் கஜேந்திரன் அந்த சுட்டி
http://ubuntu-tam.org/vaasal/
அன்புள்ள பேராசிரியருக்கு வணக்கம்.
விரைந்து பதிலளித்த தங்களுக்கு முதலில் எனது பனிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் கூறியது போல் அந்த ப்ளாக் சென்று பார்த்தேன். அதில் உபுண்டு 10.04 இன்னும் பத்து நாளில் ரீலீசாகும் என்று (சுறாவைப் போன்று) போட்டுள்ளது. ஆகவே புத்தம் புதிய உபுண்டுவுக்காக பொறுக்கலாமா என்று யோசிக்கிறேன். (21 வருடம் பொறுத்துவிட்டேன். 10 நாள் பொறுக்க மாட்டேனா???) அல்லது உபுண்டு 9 விலேயே முயற்சி செய்யட்டுமா ? (CD ஏற்கனவே download செய்துவிட்டேன்)
இது பற்றி தங்களின் மேலான அறிவுரையை வேண்டுகிறேன்.
மீண்டும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
-கஜேந்திரன், சிவகாசி
ஏப்ரல் 29ல் வெளிவரயிருக்கிறது. 10.04 lts எனவே இதையே முயற்கி செய்யுங்கள். இதில் பல நல்ல அம்சங்கள் உள்ளன
Post a Comment