முதலில் டெர்மினலில்
sudo visudo என்று கட்டளையிட்டால் கீழ்காணும் விண்டோ திறக்கும்.

இதில் Defaults env_reset என்ற வரியில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யவேண்டும்.
Defaults env_reset , timestamp_timeout=x
இங்கு x என்பது நாம் விரும்பும் நேர அளவு நிமிடங்களில் குறிக்கும். 0 என்று குறித்தால் கடவுச்சொல் உடனடியாக கேட்கும். 1 என்று குறித்தால் ஒரு நிமிடம் கழித்து sudo கட்டளையிட்டால் கடவுச்சொல் கேட்கும்.

பின்னர் contrl+x என்று அழுத்தி yes என்று கொடுத்தால் கோப்பு சேமிக்கப்பட்டுவிடும். பின்னர் sudo கட்டளையிட்டால் நாம் கொடுத்துள்ள நேரம் வரை கடவுச்சொல் கேட்காது.
1 comment:
அன்புள்ள பேராசிரியருக்கு வணக்கம்.
நீங்கள் எழுதிக்கொண்டு இருக்கும் இந்த தமிழ் வழியான உபுண்டுவை படித்து மிகுந்த ஆவலோடு உங்களை பின் தொடர்ந்து வருகிறேன். நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். இங்கு உங்களது பிளாக் முழுவதும் (கிட்டத்தட்ட 250 பக்கங்கள்) அனைத்தையும் பிரிண்ட் எடுத்து எனது தலைமை அதிகாரியிடம் காண்பித்து உபுண்டு போவதற்கு அனுமதி வாங்கியுள்ளேன். (மிகவும் மகிழ்ச்சியாக சம்மதித்தார்)
உங்களின் ஆலோசனையை கேட்டு உங்களை பின் தொடர்ந்து வரும் என்னை நல்ல முறையில் வழி காட்ட வேண்டியது உங்கள் கடமை என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
// கஜேந்திரன், சிவகாசி
Post a Comment