initrd.img-2.6.31-21-generic என்று இருக்கும். boot loaderல் kernel 2.631-21-generic என்று இருக்கும்.

இதில் என்ன இருக்கிறது என்று நாம் பார்த்தொம்மென்றால் கணினை இயக்க கூடிய பலவித கட்டளைகள் அடங்கி இருக்கும். இதை பார்ப்பதற்கு /boot அடைவினுள் இருக்கும்போதே பார்க்ககூடாது. அப்படியே இடது சொடுக்கி copy தேர்ந்தெடுத்து desktopலோ அல்லது வேறு ஏதாவது அடைவினுளோ paste செய்துவிடவேண்டும்.
பின்னர் கோப்பினை பெயர் மாற்றம் செய்யவேண்டும். அதாவது initrd.gz என்று மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த கோப்பு zip format கோப்பாகும்.

இந்த கோப்பினை இரட்டை சொடுக்கினால் கோப்பு விரிந்து ஒரு விண்டோவில் தெரியும்.

இதில் initrd ல் இரட்டை சொடுக்கினால் zip வடிவம் விரிந்து அதில் இருக்கும் அடைவுகள்,கோப்புகள் அனைத்தும் தெரியும்.

இதில் இருக்கும் அடைவுகளில் கோப்புகள் இருக்கும்.


இந்த கோப்பில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் செய்துவிட்டு மீண்டும். initrd.gz என்று அனைத்துகோப்புகளியும் சுருக்கி பின்னர் பெயர் மாற்றம் செய்யவேண்டும்.
கோப்பின் மீது இடது சொடுக்கி rename என்பதனை தேர்ந்தெடுத்து அதே பெயர் கொடுத்துவிட வேண்டும். initrd.img-2.6.31-21-generic என்றே பெயர் கொடுக்க வேண்டும். பின்னர் /boot/ அடைவினுள் காப்பி செய்துவிடவேண்டும். ஏற்கனவே இருக்கும் initrd.img-2.6.31-21-generic கோப்பினை ஒரு backup எடுத்துக்கொள்வது நல்லது.
Advanced users only
No comments:
Post a Comment