Pages

Friday, April 9, 2010

உபுண்டுவில் themes

புண்டுவில் மேசையை அழகுபடுத்த பலவிதமான wallpaper பயன்படுத்துவோம். அதுபோல் பலவகையான themeகளையும் பயன்படுத்தலாம். இது எல்லவிதமான iconகளும் மாறி புதிய icon கள் வந்துவிடும்.

இதை repository மூலம் நிறுவிக்கொள்ளலாம். டெர்மினலில்

sudo add-apt-repository ppa:bisigi என்று தட்டச்சு செய்தால் software source listல் ppa சேர்ந்துவிடும். இதில் மொத்தம் 13 தீம்கள் உள்ளன. அவற்றை நம் விருப்பம் போல் நிறுவிக்கொள்ளலாம்.

=>* Tropical ( sudo apt-get install tropical-theme )
=>* Step into Freedom ( sudo apt-get install step-into-freedom-theme )
=>* Bamboo Zen ( sudo apt-get install bamboo-zen-theme )
=>* Ubuntu sunrise ( sudo apt-get install ubuntu-sunrise-theme )
=>* Aqua Dreams ( sudo apt-get install aquadreams-theme )
=>* Show Time ( sudo apt-get install showtime-theme )
=>* Orange ( sudo apt-get install orange-theme )
=>* Ellana ( sudo apt-get install ellanna-theme )
=>* Airlines ( sudo apt-get install airlines-theme )
=>* Balanzan ( sudo apt-get install balanzan-theme )
=>* Infinity ( sudo apt-get install infinity-theme )
=>* Wild shine ( sudo apt-get install wild-shine-theme )
=>* Exotic ( sudo apt-get install exotic-theme )

அடைப்பு குறிக்குள் இருப்பதை டெர்மினலில் தட்டச்சு செய்து தீம்களை நிறுவிக்கொள்ளலாம்.

இது மொத்தமாக 278 எம்பி உள்ளது. எனவே ஏதாவது ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

முதலில் Aqua Dreams என்ற தீமை பார்ப்போம். இதை நிறுவ டெர்மினலில்

sudo apt-get install aquadreams-theme என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

இதை நிறுவும் போது திரையின் resolution கேட்கும் அதை தேர்ந்தெடுத்து ok அழுத்தினால் தீம் நிறுவப்பட்டுவிடும்.



system->preference->appearance சென்று தீமை தேர்ந்தெடுக்க வேண்டும்.


தீமை தேர்ந்தெடுத்தவுடன் மேசை மாறிவிடும். தேர்ந்தெடுத்தவுடன் வால்பேப்பர் மாற்றவா என்று கேட்கும்.




file manager



இதுபோல் இன்னும் பலவகை தீம்கள் உள்ளன அவற்றையும் தரவிறக்கி நிறுவி பயன்படுத்தலாம்.