இதற்கு முதலில் டெர்மினலில்
sudo apt-get install acct என்று கட்டளையிட்டு நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.
இதற்கு log file ஏற்படுத்த
sudo touch /var/log/pacct என்று கட்டளை கொடுக்க வேண்டும். பின்னர் இந்த நிரலை இயக்க
sudo accton /var/log/pacct என்று தட்டச்சு செய்யவேண்டும்.
இப்போது சில கட்டளைகளை பார்ப்போம்.
ac என்று கட்டளையிட்டால் மொத்த connection time தெரியும்.
ac -dp என்று கட்டளையிட்டால்
தினமும் உபயோகிப்பாளர் எவ்வளவு நேரம் உபயோகித்தார் என்று தெரியும்.

ஒரு குறிப்பிட்ட உபயோகிப்பாளர் என்ன கட்டளை இட்டார் என்பதை தெரிந்துகொள்ள
sudo lastcomm

ஏற்கனவே இடப்பட்ட கட்டளைகளின் தகவல்களை பெற
sudo sa

sudo sa -u என்று கட்டளையிட்டால் ஒவ்வொரு உபயோகிப்பாளரின்கட்டளைகள் தெரியும்..

இவற்றை செயல்படுத்த administrator ஆக நுழைந்து இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment