முதலில் டெர்மினலில்
#sudo mkdir -p /mnt/isodir என்று தட்டச்சு செய்தால் isodir என்று ஒரு directory உருவாகிவிடும்.
பின்னர் iso கோப்பு எந்த அடைவினுள் இருக்கிறதோ அந்த அடைவினுள் சென்று டெர்மினலில்
#sudo mount -o loop NimbleX-91111asw.iso /mnt/isodir என்று தட்டச்சு செய்யவேண்டும்.
என்னுடைய கணினியில் NimbleX-91111asw.iso என்ற கோப்பினை Desktop வைத்துருக்கிறேன்.
எனவே டெர்மினலில்
#cd Desktop என்று தட்டச்சு செய்து Desktop வரவேண்டும். பின்னர் மேற்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.
பின்னர் டெர்மினலில்
#cd /mnt/isodir என்று தட்டச்சு செய்து isodir என்ற அடைவிற்கு செல்லவேண்டும்.
பின்னர் டெர்மினலில் dir கட்டளையிட்டால் கோப்புகள் தெரியும்.




2 comments:
what is the purpose of mounting an iso image?
Sorry, now I understood, the contents can be seen!
Post a Comment