Pages

Tuesday, January 12, 2010

உபுண்டுவில் mplayer பயன்படுத்தி gif கோப்பு தயாரித்தல்

உபுண்டுவில் mplayer உபயோகித்து avi கோப்பினை jpeg கோப்புகளாக அதாவது frame by frame ஆக பிரிக்கலாம்.

முதலில் டெர்மினலில்

#sudo apt-get install mplayer imagemagik avidamux என்று தட்டச்சு செய்து மூன்று நிரல்களையும் நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் home directory அல்லது desktopல் ஒரு அடைவினை ஏற்படுத்தி அதில் ஒரு avi கோப்பினை காப்பி செய்து விடவும்.


பின்னர் டெர்மினலில் அந்த அடைவிற்கு சென்று


டெர்மினலில்

mplayer vadi.avi -vo jpeg என்று தட்டச்சு செய்யவேண்டும். இந்த கட்டளையானது avi கோப்பினை பல jpeg கோப்பாக மாற்றும்.


சிறிய அளவிலான கோப்பினை தேர்ந்தெடுக்கலாம். மேற்கண்ட கட்டளை டெர்மினலில் செயல்படும்போது நிறுத்துவதற்கு contrl+c அழுத்தினால் நின்றுவிடும். பெரிய avi கோப்பினை தேர்ந்தெடுத்தால் இவ்வாறு செய்யலாம்.

பின்னர் இவ்வாறு பிரிக்கப்பட்ட jpeg கோப்புகளை ஒன்றிணைத்து ஒரு gif animated கோப்பாக மாற்றலாம்.

டெர்மினலில்

conver -enhance -resize 150x150 -delay 4 -loop 0 *.jpg movie.gif என்று கட்டளையிட்டால் movie.gif என்ற animated கோப்பு கிடைக்கும். இதை நெருப்புநரி உலவியில் திறந்தால் animation நன்றாக தெரியும்.

Photobucket

No comments: