Pages

Tuesday, January 26, 2010

உபுண்டுவில் GPG error BADSIG என்று வந்தால்

உபுண்டுவில் சில சமயம் update செய்யும் போது GPG Error BADSIG என்றவாறு வந்து updae ஆகாமல் போகும். அதாவது கீழ்கண்டவாறு பிழை செய்தி வரும்.

W: GPG error: http://archive.canonical.com karmic Release: The following signatures were invalid: BADSIG 40976EAF437D05B5 Ubuntu Archive Automatic Signing Key

இதை கீழ்கண்ட முறையில் சரி செய்யலாம்.

type 1

டெர்மினலில்

#sudo -i இது root டெர்மினலுக்கு செல்ல உதவும்.

#apt-get clean

#cd /var/lib/apt என்ற அடைவினுள் செல்லவேண்டும்.

பின்னர் இதில் இருக்கும் lists என்ற அடைவை ஒரு backup copy எடுத்துக்கொள்ளவேண்டும்.

#mv lists lists.old என்றவாறு தட்டச்சு செய்தால் backup எடுக்கப்பட்டுவிடும். பின்னர்

#mkdir -p lists/partial lists என்ற அடைவினுள் partial என்ற அடைவை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே partial என்ற அடைவு இருந்தால் இது தேவையில்லை.

மீண்டும்.

#apt-get clean

#apt-get update என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

type 2

இன்னொரு முறையில் டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவேண்டும்.

sudo aptitude -o Acquire::http::No-Cache=True -o Acquire::BrokenProxy=true update

sudo apt-get update என்று தட்டச்சு செய்தால் பிழை நீக்கப்பட்டு சரியான முறையில் இயங்க தொடங்கும்.

No comments: