Pages

Sunday, January 17, 2010

உபுண்டுவில் backup restore செய்ய ஒரு எளிய script

உபுண்டுவில் backup/restore செய்ய ஒரு எளிய scriptஐ பார்ப்போம். இது நம்முடைய desktopல் உள்ள பலவற்றை backup எடுத்துகொண்டும் பின்னர் நமக்கு தேவைப்பட்ட நேரத்தில் restore செய்ய உதவுகிறது.

gnome themes, gnome panel settings, backgrounds and settings, compuz, bluetooth manager,update notifier, evalution settings,gnome terminal settings போன்ற பல settingsகளை backup/restore செய்ய உதவுகிறது. இதை நிறுவ முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து script தரவிறக்கி கொள்ளவேண்டும்.

yourgnome desktopலோ அல்லது home அடைவினுளோ இந்த scriptஐ செமித்து கொள்ளவேண்டும். முதலில் desktop ல் செமித்து கொள்ளவதாக கொள்வோம்.

arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$

#sudo chmod +x yourgnome1.sh என்று தட்டச்சு செய்து scriptஐ இயங்ககூடிய scriptஆக மாற்றிகொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்

#sudo ./yourgnome1.sh என்று தட்டச்சு செய்தால் நிரல் இயங்க தொடங்கும்.


இதில் நாம் செய்யப்போகும் வேலைக்கு ஏற்றார் போல் 1 அல்லது 2 தட்டச்சு செய்யவேண்டும். backup செய்வதாக இருந்தால் 1 தேர்ந்தெடுக்கலாம்.


நாம் எந்த அடைவை backup எடுக்க வேண்டுமோ அதை path: நேராக மேலே கண்ட படத்தில்
உள்ளது போல் தட்டச்சு செய்யவேண்டும்.


பின்னர் நிரல் இயங்கி மேலே உள்ள படத்தில் உள்ளதுபோல் வந்தால் filename: என்ற இடத்தில் நமக்கு விருப்பம்போல் ஒரு பெயரை தட்டச்சு செய்யவேண்டும்.


நிரல் முடிந்தவுடன் home அடைவினுள் சென்று செமித்துவிடும்.

பின்னர் நமக்கு தேவையான சமயத்தில் 2 தட்டச்சு செய்து restor செய்துகொள்ளலாம்.

No comments: