Pages

Tuesday, January 26, 2010

உபுண்டுவில் proxy server

உபுண்டுவில் proxy server எப்படி அமைப்பது என்பது பற்றி பார்ப்போம்.

பொதுவாக bsnl broadband வீடுகளில் சேவை அளிக்கும்போது direct internet connection தான் இருக்கும். அலுவலகத்தில் பல கணினிகளை இணைத்து இருப்பார்கள். அங்கு இந்த proxy server பயன்படும். வீடுகளில் அல்லது அலுவலகத்திலோ தனியாக ஒரு மோடம் கொடுத்து இருப்பார்கள்.proxy server தேவைப்பட்டால் அவர்களே settings அமைத்து கொடுத்துவிடுவார்கள். ஒருவேளை os செயல்இழந்தாலோ அல்லது மீண்டும் நிறுவ வேண்டி வந்தாலோ அவர்களை அழைக்க வேண்டி இருக்கும். அதற்க்காக அவர்களிடம் இந்த proxy server மற்றும் port no. ஆகியவைகளை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

proxy server அமைக்க

System->preferences->network proxy தேர்ந்தெடுத்து அதில் அமைக்க வேண்டும்.

இதில் பெரும்பாலும் வீடுகளில் direct internet connection தேர்வு செய்து இருப்பார்கள். proxy server தேவைப்படும் இடங்களில் manual proxy coniguration தேர்வு செய்ய வேண்டும். HTTp proxy, secure proxy, ftp proxy போன்றவைகளிலும் அமைக்க வேண்டும். அவ்வாறில்லாமல் எல்லாம் ஒன்றாக இருந்தால் use same proxy for all protocols தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் details பொத்தனை அழுத்தினால் user name, password கேட்கும்.

தேவைப்பட்டால் கொடுக்கலாம் இல்லையேன்றால் தேவையில்லை.

பின்னர் synaptic package managerல் சென்று இதே போல் proxy server அமைக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு update செய்ய முடியும்.

System->Administration->Synaptic package manager ->preferences->network


இங்கும் direct internet connection மற்றும் manual proxy configuration இருக்கும். network proxy ல் என்ன அமைத்தோமோ அதையேதான் இங்கும் அமைக்க வேண்டும். மாற்றினால் update ஆகாது. எனவே update ஆனாமல் இருந்தால் இந்த இரண்டையும் உடனடியாக பார்க்க வேண்டும்.

இதற்கு பிறகும் கூட firefox உலாவியில் இதே போல் proxy server அமைக்க வேண்டும்.

Firefox->Edit->preferences->advanced->network->settings



இதில் நான்கு option இருக்கிறது இதில் நாம் network proxyயில் direct internet connection என்று தேர்வு செய்திருந்தால் இங்கு use system proxy settings,auto detect proxy settings for this network இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தேடுத்து கொள்ளவேண்டும். அவ்வாறில்லாமல் manual proxy settings கொடுத்திருந்தால் use sytem proxy settings அல்லது manual proxy settings தேர்ந்தெடுக்க வேண்டும். manual proxy settings தேர்ந்தெடுத்து இருந்தால் இங்கும் network proxy ல் அமைத்தது போலவே அமைக்க வேண்டும்.

மேற்கண்ட முறைகளே இணைய உலாவ போதுமானது. உபுண்டுவில் network manager என்ற நிரல் default ஆகவே அமைத்து இருப்பார்கள் அதுவே பார்த்துகொள்ளும்.


பேனலில் network manager iconல் இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் connection information தேர்ந்தெடுத்தால் அதில் ip address போன்றவை இருக்கும்.

இதில் நம்முடைய broadband modem details இருக்கும்.

2 comments:

Paleo God said...

மன்னிக்க வேண்டும் நீங்கள் அனுப்பிய மின் அஞ்சல் ஸ்பாம் க்கு சென்றுவிட்டது இன்றுதான் கவனித்தேன்.. முயற்சி செய்துவிட்டு தகவலளிக்கிறேன் மிக்க நன்றி ..:))

Anonymous said...

உபுண்டுவில் எவ்வாறு mail server configuration செய்வது என்று தயவு செய்து சொல்ல முடியுமா?