Pages

Sunday, January 3, 2010

உபுண்டுவில் iso image உருவாக்குதல்

உபுண்டுவில் iso image உருவாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட கோப்பையோ அல்லது ஒரு அடைவயோ backup எடுக்க பயன்படுத்தலாம்.

1.brasero

Applications->Sound & video->Breasero disk burner தேர்ந்தெடுத்தால் பின்வரும் விண்டோ விரியும்.

இதில் data projectஐ தேர்ந்தெடுத்தால்.

இதில் add பொத்தானை அழுத்தி கோப்பையோ அல்லது ஒரு அடைவையோ தேர்ந்தெடுத்து burn பொத்தானை அழுத்தினால்

பின்னர் இதில் மீண்டும் burn பொத்தானை அழுத்தினால் iso image அதாவது நாம் தேர்ந்தெடுத்த கோப்பையோ ஒரு அடைவையோ iso image கோப்பாக மாற்றிவிடும்.

2.கட்டளை வரியில் iso image உருவாக்குதல்

இதற்கு genisoimage என்ற நிரலை நிறுவவேண்டும். brasareo நிறுவியிருந்தால் இந்த நிரல் தானாகவே நிறுவப்பட்டு இருக்கும். இல்லையேன்றால்

#sudo apt-get install genisoimage என்று தட்டச்சு செய்து நிறுவிகொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில் iso image உருவாக்க கீழ்கண்ட கட்டளை தட்டச்சு செய்யவேண்டும்.

#genisoimage -o my_image.iso file1 file2 file3 தனிதனி கோப்புகளை iso imageஆக உருவாக்கலாம்.

#genisoimage -0 my_image.iso mydirectory ஒரு அடைவை iso image ஆக மாற்றலாம்.

No comments: