உபுண்டுவில் விரைவாக package நிறுவ கீழ்கண்ட வழிமுறைகளை பார்ப்போம்.
டெர்மினலில் sudo apt-get install package_name என்று தட்டச்சு செய்தோ அல்லது ubuntu software center சென்றோதான் நிரலை நிறுவுவோம். அப்படியில்லமால் விரைவாக நிறுவுவதற்கு
டெர்மினலில்
#sudo apt-get install apturl என்று தட்டச்சு செய்து apturl என்ற நிரலை நிறுவிகொள்ளவேண்டும்.
இப்போது apt:package_name என்று தட்டச்சு செய்தே நிரலை நிறுவிவிடலாம். முதலில்
alt+F2 என்று பொத்தானை அழுத்தினால் தோன்றும் விண்டொவில் apt:smplayer என்று அதாவது நாம் விரும்பும் ஏதாவது ஒரு நிரலை தட்டச்சு செய்யவேண்டும்.
பின்னர் run பொத்தானை அழுத்தினால் நிரல் நிறுவ தொடங்கும்
இதில் install அழுத்தினால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.
Friday, January 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment