Pages

Sunday, January 24, 2010

உபுண்டுவில் numeric lock கணினி ஆரம்பிக்கும்போது செயல்பட வைக்க

உபுண்டுவில் கணினி ஆரம்பிக்கும்போது numeric lock செய்வதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பார்க்கலாம்.
logon செய்யும்போது கடவுச்சொல் எண்களாக அமைத்திருந்தால் இது மிகவும் உதவியாக இருக்கும். சிலசமயங்களில் numeric lock ஆகாமல் இருந்து மறந்துபோய் எண்களை அழுத்தினால் கடவுச்சொல் தவறு என்று வரும். இதை தவிர்க்க முதலில் டெர்மினலில்

#sudo apt-get install numlockx என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இது software center மற்றும் synaptic package managerலும் கிடைக்கும்.

பின்னர் நிறுவியவுடன் டெர்மினலில்

#sudo gedit /etc/gdm/Init/Default என்று கட்டளையிட கோப்பு திறக்கும்.

இதில் exit 0 என்பதை கண்டுபிடித்து

அதன் மேல் கீழ்கண்ட வரிகளை செர்த்துவிட வேண்டும்.

if [ -x /usr/bin/numlockx ]; then
/usr/bin/numlockx on
fi




செமித்து வேளியேற மீண்டும் கணினி ஆரம்பிக்கும்போது numeric lock on ஆகி இருக்கும்.

No comments: