Pages

Sunday, February 28, 2010

உபுண்டுவில் search history முன்னால் மற்றும் பின்னால்

உபுண்டு டெர்மினலில் எத்தனையோ கட்டளைகளை நாம் பயன்படுத்துகிறோம். எடுத்துகாட்டாக sudo மற்றும் ls ஆகியவைகள் ஆகும். இந்த கட்டளைகளை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்து டெர்மினலில் uparrow key அல்லது downarrow keyஐ தான் பயன்படுத்துவோம்.

sudo மற்றும் ls ஆகியவற்றுடன் தொடங்கும் கட்டளைகள் மட்டும் searchல் வரவழைக்க முடியும். கீழ்கண்ட வரிகளை home அடைவினுள் இருக்கும் ./bashrc என்ற கோப்பில் சேர்த்துவிட்டால் போதும்.

bind '"\e[A"':history-search-backward
bind '"\e[B"':history-search-forward


பின்னர் செமித்து வெளியேற வேண்டும்.



டெர்மினலில் bash என்று கட்டளை கொடுக்க வேண்டும். பின்னர் டெர்மினலில்

su என்று மட்டும் தட்டச்சு செய்து uparrow key அல்லது downarrow keyஐ அழுத்தினால் su என்று ஆரம்பிக்கும் எல்லா கட்டளைகளும் அதாவது ஏற்கனவே நாம் தட்டச்சு செய்த பல கட்டளைகள் ஒன்றன்பின் ஒன்றாக திரையில் தோன்றும்.

அதேபோல் ls என்று மட்டும் தட்டச்சு செய்து uparrow key அல்லது downarrow key ஐ அழுத்தினால் ls என்று தொடங்கும் கட்டளைகள் திரையில் தோன்றும்.

su என்று தொடங்கும் கட்டளைகள்

sudo apt-get install package name
sudo apt-get update
sudo chmod +x /bin/scriptname

போன்ற பல கட்டளைகள்

அதேபோல் lsல் ஆரம்பிக்கும் பல கட்டளைகள்

lshw
lspci
ls -la | xclip
போன்றவைகள் ஆகும்.

இதேபோல் பல கட்டளைகள் நாம் பயன்படுத்தியிருப்போம். c என்று டெர்மினலில் தட்டச்சு செய்து uparrokeyஐ அழுத்தினால் cd மற்றும் cancel கட்டளை அதாவது cயில் ஆரம்பிக்கும் கட்டளைகள் மட்டும் search historyயில் வரும்.

Saturday, February 27, 2010

உபுண்டுவில் printer queue வை clear செய்ய

உபுண்டுவில் printer queueவை clear செய்வதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பார்க்கலாம்.

ஒரு கோப்பினை அச்சு எடுப்பதற்கான கட்டளையை கொடுத்துவிட்டு பின்னர் அதை clear செய்ய இதை பயன்படுத்தலாம்.

முதலில் டெர்மினலில் lpq என்று தட்டச்சு செய்தால்.


arulmozhi@arulmozhi-desktop:~$ lpq
Deskjet-F4200-series is not ready
Rank Owner Job File(s) Total Size
1st arulmoz 3 leave 55296 bytes
arulmozhi@arulmozhi-desktop:~$

என்று வரும் இந்த queueவை clear செய்ய டெர்மினலில்

cancel -u user name கொடுத்தால் clear ஆகிவிடும்.

arulmozhi@arulmozhi-desktop:~$ cancel -u arulmozhi
arulmozhi@arulmozhi-desktop:~$


மீண்டும் டெர்மினலில் lpq என்று தட்டச்சு செய்தால் அனைத்தும் clear ஆகி இருப்பதை காணலாம்.

அனைத்து பயனர்களின் printer queueவை clear செய்ய டெரினலில்

cancel -a என்று தட்டச்சு செய்யவேண்டும்.

Friday, February 26, 2010

உபுண்டுவில் thunderbird backup and restore

உபுண்டுவில் இமெயில் client mozilla thunderbirdஐ நாம் backup & restore செய்ய முடியும்.
ஏதேனும் ஒரு காரணத்திற்காக நாம் linux os ஐ மீண்டும் நிறுவ தேவைப்பட்டால் இது உதவும்.

தண்டர்பெர்டின் கோப்புகள் home அடைவினுள் hidden அடைவாக இருக்கும். home அடைவினுள் சென்று contrl+H என்று அழுத்தினால் .mozilla-thunderbird அல்லது .thunderbird என்ற அடைவு இருப்பதை பார்க்கலாம்.

இந்த அடைவை திறந்தால் அதனுள் *.default என்ற extension உடைய ஒரு அடைவும் மற்றும் profiles.ini என்ற கோப்பும் இருக்கும்.


இதில் .default என்ற extension உடைய அடைவை நாம் backup எடுத்துக்கொள்ளவேண்டும்.

arulmozhi@arulmozhi-desktop:~$ cd .mozilla-thunderbird
arulmozhi@arulmozhi-desktop:~/.mozilla-thunderbird$ tar -czf thunderbird_data.tar.gz lyyulvtp.default/
arulmozhi@arulmozhi-desktop:~/.mozilla-thunderbird$




இப்போது .mozilla-thunderbird என்ற அடைவினுள் backup காப்பியும் இருக்கும்.


இந்த backup காப்பியை தனியாக வேறு ஒரு இடத்திலோ அல்லது சிடியிலோ காப்பி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் profiles.ini என்ற கோப்பில்


மஞ்சள் வண்ணத்தில் highlight செய்யப்பட்டுள்ள வரியில் தான் .default extension என்ற அடைவின் பெயர் உள்ளது. எனவே நாம் ஏற்கனவே backup எடுத்துவைத்துள்ள கோப்பினை extract செய்து அதில் உள்ள அடைவினை .mozilla-thunderbird என்ற அடைவிற்கு காப்பி செய்துவிட்டு பின்னர் profiles.ini என்ற கோப்பில் காப்பி செய்த அடைவின் பெயரை path=ல் சேர்த்துவிட்டு சேமிக்கவேண்டும்.


[General]
StartWithLastProfile=1

[Profile0]
Name=default
IsRelative=1
Path=lyyulvtp.default

என்று இருக்கும்.

extract செய்வதற்கு

arulmozhi@arulmozhi-desktop:~$ cd .mozilla-thunderbird
arulmozhi@arulmozhi-desktop:~/.mozilla-thunderbird$
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ tar xvzf thunderbird_data.tar.gz

என்று கட்டளையிட வேண்டும்.


இப்போது thunderbird முன்னர் இருந்தபடியே இயங்கதுவங்கும்.

Thursday, February 25, 2010

உபுண்டுவில் number command

உபுண்டுவில் டெர்மினலில் நாம் பலவிதமான கட்டளைகளை கொடுக்கிறோம். அதை மறந்துவிடுவோம். ஆனால் உபுண்டு அந்த கட்டளைகளை நினைவில் வைத்திருக்கும்.

எப்படி என்று பார்ப்போம். உதாரணமாக டெர்மினலில்

#sudo apt-get update என்று ஒரு கட்டளையை கொடுப்போம். கட்டளை முடிந்தவுடன் டெர்மினலில்

@history | tail -3 என்று கட்டளை கொடுத்தால்



நாம் இதற்குமுன் கொடுத்த மற்ற இரண்டு கட்டளைகளும் சேர்ந்து மொத்தம் மூன்று கட்டளைகளாக டெர்மினலில் தெரியும்.

மூன்றிற்கு பதில் 10,20, என்று கூட கொடுக்கலாம்.

மேலே உள்ள படத்தில் 187 என்ற எண்ணிற்கு நேராக sudo apt-get update என்ற கட்டளை இருப்பதை பார்க்கலாம். இந்த கட்டளையை செயல்படுத்த கட்டளை முழுவதையும் தட்டச்சு செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக

#!187 என்று மட்டும் தட்டச்சு செய்தால் 187 என்ற எண்ணிற்கு நேராக உள்ள கட்டளை செயல்படதுவங்கும். இந்த 186,187,188 எண்கள் அவரவை கணினிக்கு ஏற்றார் போல் மாறும்.


இப்போது sudo apt-get update கட்டளை செயல்படுவதை பார்க்கலாம். இதுபோல் வேறு பல கட்டளைகள் கொடுத்து இருந்தால் அதையும் செயல்படுத்தலாம்.


Wednesday, February 24, 2010

உபுண்டுவில் external hard disk unmount ஆகாமல் இருந்தால்

உபுண்டுவில் நாம் extra hard disk பயன்படுத்திவிட்டு பின்னர் அதை unmount செய்ய முயற்சிகையில்

unmount :/media/disk device is busy என்று ஒரு பிழை செய்தி வரும். இதை தவிர்ப்பதற்கு கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்.

1. டெர்மினலில் #pwd என்று கட்டளையிட்டு நாம் எந்த அடைவினுள் இருக்கிறொம் என்று தெர்ந்துகொள்ளவேண்டும்.

பின்னர் வேறு ஒரு அடைவிற்கு சென்று

cd
unount /media/disk என்று கட்டளை கொடுத்தால் unmout ஆகிவிடும்.

2.எந்த கோப்பவது external hard diskஐ உபயோகப்படுத்திகொண்டு இருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். இதற்கு டெர்மினலில்

lsof | grep "/media/disk" என்று கட்டளையிட்டால் தெரிந்துவிடும். பின்னர் எல்லா நிரல்களையும் மூடிவிட்டு unmount செய்யலாம். இதற்கு டெர்மினலில்

#kill -9 2693
#unmount /media/disk என்று கொடுத்தால் unmount ஆகிவிடும்.

3.கணினியானது external hard diskஐ பயன்படுத்திகொண்டு இருந்தால் அதாவது process நடந்துகொண்டு இருந்தால் டெர்மினலில்

#fuser -m /media/disk
#ps -e | grep 2693
#kill -9 2693
#unmount -l /media/disk என்று கட்டளை கொடுத்தால் unmount ஆகிவிடும். அல்லது

#fuser -k /media/disk
#unmount /media/disk என்றும் கட்டளை தரலாம்.

உபுண்டு டெர்மினலில் எழுத்துக்கள் கலரில் வரவழைக்க

உபுண்டுவில் டெர்மினலில் காணப்படும் எழுத்துக்கள் பல்வேறு வண்ணத்தில் வரவழைக்க முடியும்.



இதேபோல் பலவேறு வண்ணத்தில் வரவழைக்க முடியும். அதற்கு கீழ்கண்ட வரிகளை /home/user/.bashrc என்ற கோப்பில் சேர்ப்பதன் மூலம் முடியும்.

PS1='${debian_chroot:+($debian_chroot)}\u@\h:\w\$ ' PS1='\[$(tput setaf 2)\]\u@\h:\w$ '


இந்த வரியில் tput setaf 2 என்ற இடத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் '2' பச்சை கலரை குறிக்கும். இதில் பல்வேறு வண்ணத்தில் வரவழைக்க

1 = red (dark)
2 = green
3 = orange (dark)
4 = blue (dark)
5 = magenta (dark)
6 = blue (turqois)
7 = gray
8 = red (bright)
9 = white

2ற்கு பதில் 1 லிருந்து 9 வரை எண்களை கொடுக்கலாம்.

4 என்று கொடுத்தால்



எனவே நமக்கு பிடித்தமான வண்ணத்தில் டெர்மினலில் எழுத்துக்களை அமைத்துகொள்ளலாம்.

Tuesday, February 23, 2010

உபுண்டுவில் '!!' command

உபுண்டுவில் உதாரணமாக update செய்வதற்கு sudo apt-get update என்று தட்டச்சு செய்வோம். தவறுதலாக வெறும் apt-get update என்று தட்டச்சு செய்தால் பிழை செய்தி வரும்.


பின்னர் sudo சேர்த்து தட்டச்சு செய்வோம். அப்படியில்லாமல்,

டெர்மினலில்

sudo !! என்று மட்டும் தட்டச்சு செய்தால் போதுமானது.



முன்னர் தவறுதலாக கொடுக்கப்பட்ட கட்டளை இதனுடன் சேர்ந்துவிடும்.

எந்த கட்டளை கொடுத்தாலும் மேலே குறிப்பிட்டது போன்றே செயல்படும்.

Monday, February 22, 2010

உபுண்டு openofficeல் text to speech

உபுண்டு openofficeல் நாம் word processorல் தேர்ந்தெடுக்கப்பட்ட text வரிகளை நம்முடைய கணினியின் speakerகளில் ஒலி வடிவில் கேட்க முடியும்.

இதற்கு முதலில் இந்த addon Read text ஐ தரவிறக்கி openofficeல் extension managerஇல் நிறுவிக்கொள்ளவேண்டும். எப்படி add on நிறுவுவது என்பது பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம்.



இப்போது openoffice word processorல் ஒருகோப்பினை திறந்து சில வரிகளை தேர்ந்தெடுத்துகொள்ளவேண்டும்.





பின்னர் Tools->Addons சென்று read selectionஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.பின்னர் கீழ்கண்டவாறு ஒரு விண்டோ திறக்கும்.



இதில் ok அழுத்த உடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள் ஒலி வடிவில் கணினியின் speakerகளில் கேட்க தொடங்கும்.

இந்த addon ஏற்கனவே உபுண்டு 9.10ல் உள்ள espeakமூலம் கேட்க முடியும். அப்படியில்லாமல் festival நிரல் மூலமாகவும் கேட்க முடியும். இந்த நிரலை synaptic package manager மூலமாக நிறுவிக்கொள்ளலாம்.

Sunday, February 21, 2010

உபுண்டு openofficeலிருந்து google docக்கிற்கு upload & download செய்ய

உபுண்டு openoffice.org லிருந்து google docகிற்கு upload மற்றும் download செய்யலாம். இதற்கு உதவுவது இந்த extension ஆகும். இதை தரவிறக்கி கணினியில் சேமித்துகொள்ளவேண்டும். பின்னர் openoffice word document அல்லது calc document திறந்து கொண்டும். அதில் Tools->Extension Manager செல்ல வேண்டும்.



இதில் add பொத்தனை அழுத்தி ஏற்கனவே தரவிறக்கி வைத்திருந்த extension தேடி தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் license agreement திரை வரும். அதில் accept பொத்தனை அழுத்தினால் நிறுவப்பட்டுவிடும்.


இதன் பின்னர் openoffice word document ஐ திறந்து நாம் ஏதெனும் முக்கியமான தகவல்களை உள்ளீடு செய்து செமித்தபின் File-->Google doc & zoho என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் Export to Google doc என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் user name என்ற இடத்தில் google user name கொடுக்க வேண்டும். பின்னர் passwordல் நம்முடைய password கொடுக்கவேண்டும். Document nameல் நாம் திறந்து வைத்துள்ள கோப்பின் பெயர் இருக்கும். பின்னர் OK அழுத்தினால் கோப்பு export ஆக தொடங்கும். இதில் authenticated பிழை செய்தி வந்தால் user nameல் username@gmail.com என்று கொடுக்கவேண்டும்.

இதன் பின்னர் import செய்ய Goolge docs & zohoவில் import from google docs தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதிலும் user name & password கொடுத்தால் document list வரும் இதை download பொத்தானை அழுத்தினால் கோப்பு தரவிறங்க தொடங்கும். இந்த கோப்பினை doc அல்லது txt அல்லது ots formatஇல் தரவிறக்கி கொள்ளலாம்.இதில் தரவிறங்கும் கோப்பு எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதையும் configuration பொத்தனை அழுத்தி அமைக்கலாம்.




இப்போது google docக்கிறகு சென்றால் நாம் export செய்த கோப்பிகள் இருக்கும்.


Google docற்கு செல்லாமல் openoffice இருந்தபடியே கோப்புகளை export and import செய்யலாம்.
இதேபோல் zoho விலும் செயல்படுத்தலாம்.

Saturday, February 20, 2010

உபுண்டுவில் back to previous directory

உபுண்டுவில் நாம் ஒரு அடைவினுள் சென்று அங்கிருந்து முன் வேலை செய்த அடைவிற்கு செல்ல டெர்மினலில் cd~ என்று தட்டச்சு செய்வோம். ஆனால் இதை எளிதில் நினைவில் வைத்திருக்க ஒரு alises கட்டளை உருவாக்கலாம்.

இதற்கு home அடைவினுள் இருக்கும் .bashrc என்ற கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

alises='cd~' அல்லது alises='cd $OLDPWD'



பின்னர் சேமித்டு வேளியேறவேண்டும். இதன் பின் டெர்மினலில் back என்று தட்டச்சு செய்தால் நாம் முன் இருந்த அடைவிற்கு சென்று விடலாம்.


இங்கு cd~ என்பதும் $OLDPWD என்பதும் ஒன்றுதான். இரண்டில் எது இருந்தாலும் back வேலை செய்யும்.

காப்பி & பேஸ்ட்

ஒரு டெக்ஸ்டை காப்பி & பேஸ்ட் செய்ய முதலில் டெக்ஸ்டை செலக்ட் செய்து பின்னர் இடது சொடுக்கி copy போத்தானை அழுத்தி பின்னர் நாம் விரும்பிய இடத்தில் கர்ஸரை வைத்து மீண்டும் இடது சொடுக்கி paste போத்தானை அழுத்துவோம். அப்படியில்லமல் ஒரு டெக்ஸ்டை செலக்ட் செய்துவிட்டு நாம் விரும்பிய இடத்தில் சுர்சரை வைத்து மவுஸின் நடு பொத்தனை அழுத்தினால் நாம் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் காப்பி ஆகியிருப்பதை பார்க்கலாம்.முக்கியமாக டெக்ஸ்டை செலக்ட் செய்தபின் எந்த ஒரு மவுஸ் பொத்தனையும் அழுத்தியிருக்க கூடாது.

உபுண்டுவில் rm (move to trash) command

உபுண்டுவில் ஒரு கோப்பையோ அல்லது ஒரு அடைவயோ அழிப்பதற்கு பொதுவாக நாம் பயன்படுத்துவது sudo rm என்ற கட்டளையை தான். இந்த கட்டளை கோப்பினை முழுவதுமாக அழித்துவிடும் .அப்படியில்லமல் rm என்று மட்டும் கொடுத்து trash folderல் அனுப்ப முடியும்.

இதற்கு முதலில் டெர்மினலில்

sudo apt-get install trash-cli என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் /usr/bin என்ற அடைவினுள் trash-rm என்ற கோப்பினை உருவாக்க வேண்டும் டெர்மினலில்

sudo gedit /usr/bin/trash-rm என்ற கோப்பினை திறந்து அதில் கீழ்கண்டவற்றை காப்பி பேஸ்ட் செய்யவேண்டும்.

#!/bin/bash
# command name: trash-rm
shopt -s extglob
recursive=1
declare -a cmd
((i = 0))
for f in "$@"
do
case "$f" in
(-*([fiIv])r*([fiIv])|-*([fiIv])R*([fiIv]))
tmp="${f//[rR]/}"
if [ -n "$tmp" ]
then
#echo "\$tmp == $tmp"
cmd[$i]="$tmp"
((i++))
fi
recursive=0 ;;
(--recursive) recursive=0 ;;
(*)
if [ $recursive != 0 -a -d "$f" ]
then
echo "skipping directory: $f"
continue
else
cmd[$i]="$f"
((i++))
fi ;;
esac
done

பின்னர் சேமித்து வெளியேற வேண்டும். இதன் பின் டெர்மினலில் இந்த scriptஐ இயக்க நிலைக்கு மாற்ற

sudo chmod +x /usr/bin/trash-rm என்று கட்டளையிட வேண்டும்.

பிறகு rm என்ற alises உருவாக்க வேண்டும். இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன்.

டெர்மினலில்

sudo gedit ~/.bashrc என்று கட்டளையிட்டு home dirctoryயில் உள்ள .bashrc என்று கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

alises rm="trash-rm" என்று சேர்த்து சேமித்துகொள்ளவேண்டும். இதன் பின் நாம் டெர்மினலில் bash என்று கட்டளையிட்டுவிட்டு rm கட்டளை பயன்படுத்தலாம். அதாவது டெர்மினலில்

'rm கோப்பின் பெயர்' என்று கட்டளையிட்டு செயல்படுத்தலாம்.

இதில் மேலும் இதில் பல்வேறு trash commandகளை பயன்படுத்தலாம்.

empty-trash
list-trash
restore-trash

Friday, February 19, 2010

உபுண்டுவில் டெர்மினலில் copy & paste

உபுண்டுவில் டெர்மினலில் copy & paste செய்வதற்கு ஒரு நிரல் xclip.

முதலில் இதை நிறுவ டெர்மினலில்

sudo apt-get install xclip என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும். இதை செயல்படுத்த முதலில்

ls -la என்று தட்டச்சு செய்தால் டெர்மினலிலேயே output வந்துவிடும்.




இந்த outputஐ ஒரு txt கொப்பில் xclip மூலமாக சேமிக்க முடியும்.டெர்மினலில்

ls -la | xclip என்று தட்டச்சு செய்தால்


என்றவாறு இருக்கும். ஒரு text editorஐ பயன்படுத்தி ஒரு text கோப்பினை திறந்து அதில் mouseன் நடுவில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் கோப்பில் output paste செய்யப்பட்டுவிடும்.


இந்த கோப்பினை பெயர் கொடுத்து செமித்துக்கொள்ளலாம்.

மேலும் ஒரு கோப்பில் இருப்பதை இன்னொரு கோப்பில் காப்பி செய்வதற்கு அதாவது

/etc/apt/sources.list என்று முக்கியமான ஒரு கோப்பினை backup எடுப்பதற்கு டெர்மினலில்

xclip /etc/apt/sources.list என்று தட்டச்சு செய்து பின்னர் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து அதில் paste செய்து செமிக்கலாம்.


பின்னர் இந்த கோப்பிற்கு பெயர் கொடுத்து செமித்துக்கொள்ளலாம்.

Thursday, February 18, 2010

உபுண்டுவில் aliases

உபுண்டுவில் alises என்பது நாமே உருவாக்கும் கட்டளைகள் ஆகும். அதாவது பல கட்டளை வாக்கியங்களை சுருக்கி ஒரே ஒரு வார்த்தையில் தருவது.

உதாரணமாக நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் கட்டளைகள்

sudo apt-get update
sudo apt-get upgrade என்ற கட்டளைகளை உபயோகிப்போம். அல்லது

sudo apt-get update && sudo apt-get upgrade என்றவாறு உபயோகிப்போம். அப்படியில்லாமல் வேறு மாதிரி பயன்படுத்தலாம்.

home அடைவினுள் இருக்கும் கோப்பான bashrc என்ற கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்ப்பதன் மூலம் சுருக்கி தரமுடியும். இதை காண home அடைவினுள் சென்று contrl+H பொத்தான்களை அழுத்தவேண்டும். கோப்பின் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் கோப்பு திறந்து கொள்ளும்.

bashrc என்ற கோப்பில் (homeஅடைவினுள் இருப்பது) கடைசியில்

alias upgrade='sudo apt-get update && sudo apt-get upgrade' என்ற வரிகளை சேர்த்து பின்னர் சேமிக்கவேண்டும்.

டெர்மினலில்

upgrade என்று மட்டும் தட்டச்சு செய்தால் மேலே சொன்ன இரண்டு கட்டளைகளும் செயல்படுவதை பார்க்கலாம்.


இது போல் பல கட்டளைகளை செயல்படுத்தலாம். உதாரணமாக

alias killfx='kill -9 $(pidof firefox)'
alias gotocd='cd /media/cdrom0' ஆகிய இரண்டு கட்டளைகள்

முதல் கட்டளை நெருப்பு நரியை மூடிவிடும்.நெருப்பு நரி திடீரென்று நின்று போனால் இதை உபயொக்கிலாம்.

இரண்டாவது கட்டளை cdயில் உள்ள கோப்புகளை காணலாம்.

Wednesday, February 17, 2010

உபுண்டுவில் scan செய்ய ஒரு எளிய நிரல்

உபுண்டுவில் படங்கள் மற்றும் டாகுமென்ட்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு எளிய நிரலைப்பற்றி பார்ப்போம். ஏற்கனவே xsane இருந்தாலும் இது எளிய நிரல் என்பதால் இதை பயன்படுத்திப்பார்க்கலாம்.

இந்த நிரல் அடுத்து வரபோகிற 10.04 ல் உள்ளது. 9.10லும் இதை நிறுவி பயன்படுத்தலாம்.

முதலில் டெர்மினலில்

sudo add-apt-repository ppa:robert-ancell/simple-scan என்று தட்டச்சு செய்து software sourceல் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில்

sudo apt-get update
sudo apt-get install simple-scan என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.


Tuesday, February 16, 2010

உபுண்டு நெருப்பு நரியில் flash video வேலை செய்ய வைக்க

உபுண்டுவில் சில நாட்களுக்கு முன் நெருப்பு நரியில் flash video சரிவர வேலை செய்யவில்லை. எத்தனையோ plugin நிறுவிப்ப்பார்த்தும் பலனில்லை. இறுதியாக கீழ்கண்ட கட்டளை கைகொடுத்தது.

முதலில் கணினியில் உள்ள எல்லா flash player களையும் நீக்கிவிட்டேன். அதாவது டெர்மினலில்

sudo apt-get remove swfdecmozilla mozilla-plugin-gnash adobe-flashplugin flashplugin-nonfree

என்று கட்டளை கொடுத்தேன். பின்னர் மீண்டும் டெர்மினலில்

sudo apt-get install flashplugin-nonfree

என்று கட்டளை கொடுத்து மீண்டும் நெருப்பு நரியை துவங்கினேன். இப்போது flash video வேலை செய்ய துவங்கியது.

Monday, February 15, 2010

உபுண்டு நெருப்பு நரியில் netcraft நீட்சி.

உபுண்டு நெருப்பு நரியில் இணைய உலாவும் போது பாதுகாப்பிற்கான நீட்சிதான் Netcraft tool bar.

இது
1.phising sites
2.bank fraud sites

போன்ற ஏமாற்று இணைய தளங்களை கண்டறிய பயன்படுகிறது. இது நெருப்பு நரியில் நீட்சியாகவே வருகிறது. இணைய தளங்களின் ip address, எந்த நாட்லிருந்து இணைய தளம் இயங்குகிறது என்பதையும், உரிமையாளர்களின் முகவரி உள்ளிட்ட பல தகவல்களை பெற முடியும்.

மேற்கண்ட தகவல்கள் இல்லையேன்றால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.





மேலே உள்ள படம் google.inc லினக்ஸில் இயங்குவதை காட்டுகிறது.

உபுண்டுவில் kernel update

உபுண்டுவில் kernel update செய்வதைப்பற்றி பார்ப்போம். அண்மையில் உபுண்டு kernel பாதுகாப்பிற்க்காக மேம்படுத்திக்கொள்ள சொல்லியது. எனவே மேம்படுத்திக்கொள்ள்வது அவசியமாகிறது. முதலில் டெர்மினலில் நாம் எந்த kernel உபயோகிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள

uname -a என்று தட்டச்சு செய்யவேண்டும்.


என்ன வெர்ஷன் என்று தெரிந்துகொண்டபின் மேம்படுத்துவதற்க்காக kernal தரவிறக்கவேண்டும்.

kernel தரவிறக்க இந்த சுட்டி செல்லவேண்டும்.


இதில் எது update என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.


இந்த மூன்று கோப்புகளையும் தரவிறக்கிக்கொள்ளவேண்டும்.பின்னர் இதை எப்படி நிறுவுவது என்பதை பார்ப்போம்.

1. linux-headers-2.6.32-020632_2.6.32-020632_all.deb

sudo dpkg -i linux-headers-2.6.32-020632_2.6.32-020632_all.deb

2. linux-headers-2.6.32-020632-generic_2.6.32-020632_i386.deb

sudo dpkg -i linux-headers-2.6.32-020632-generic_2.6.32-020632_i386.deb

3. linux-image-2.6.32-020632-generic_2.6.32-020632_i386.deb

sudo dpkg -i linux-image-2.6.32-020632-generic_2.6.32-020632_i386.deb

நிறுவியப்பின் கணினியை மீளதுவங்கவேண்டும். இப்போது மீண்டும் uname -a என்று கட்டளை கொடுத்தால் kernel மேம்படுத்தப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.

Sunday, February 14, 2010

உபுண்டு vlcயில் வீடியோ recording

உபுண்டுவில் ஏதாவது திரைப்படமோ அல்லது நிகழ்ச்சிகளோ ஒடிக்கொண்டிருக்கும்போது நமக்கு தேவையான இடத்தை மட்டும் தனியாக record செய்து பார்க்க முடியும்.

இதற்கான வழிகள் வழக்கமான vlcயிலேயே உள்ளது. vlc திறந்தவுடன் view->advanced control தேர்ந்தெடுத்தவுடன் record பட்டன் தெரிய ஆரம்பிக்கும். இது defaultஆக மறைத்து வைக்கப்பட்டு இருக்கும்.


இதை அழுத்தினால் record செய்ய ஆரம்பிக்கும். தேவையான பகுதி முடிந்தவுடன் மீண்டும் அழுத்தினால் record செய்வது நின்றுவிடும்.

நம்முடைய webcam மூலமாகவும் record செய்ய முடியும். இதற்கு

media->open capture device சென்று play பொத்தனை அழுத்தவேண்டும்.


இதில் record செய்யப்பட்ட வீடியோ avi formatல் இருக்கிறது. home அடைவினுள் செமிக்கப்படுகிறது. ஆனால் totemஇல் இந்த வீடியோவை ஒட விட்டால் பிழை செய்தி வருகிறது. vlcல் மட்டும் வேலை செய்கிறது. sound capture இல்லை.

உபுண்டுவில் dos application

உபுண்டுவில் dos application இயங்குவதை பற்றி பார்ப்போம்.

சில விளையாட்டுகள் மற்றும் சில நிரல்களை நாம் இயக்கமுடியும். இங்கு நான் எடுத்துக்கொண்டது dos application foxpro ஆகும்.

முதலில் டெர்மினலில்

sudo apt-get install dosbox என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் foxpro application எங்கு இருக்கிறதோ அதை அப்படியே காப்பி செய்து நம்முடைய home அடைவினுள் பேஸ்ட் செய்துவிடவேண்டும்.

டெர்மினலில் dosbox என்று கட்டளை கொடுத்தால்


பின்னர் fox அடைவை mount செய்யவேண்டும். மேலே உள்ள படத்தில்ல் z:\> என்று இருக்கும். அதில்

mount c /home/arulmozhi/fox என்று தட்டச்சு செய்தால் mount ஆகிவிடும்.

இப்போது c: என்று தட்டச்சு செய்தால் C க்கு சென்றுவிடும்.


இப்போது dir/w என்ற கட்டளையை கொடுத்தால் வருவது


c யில் சென்று fox என்று தட்டச்சு செய்தால் foxpro வேலை செய்ய துவங்கும்.


இப்போது ஒரு கோப்பினை திறக்கலாம்.


பின்னர் கோப்பிலிருந்து வெளியேறி quit கொடுத்து foxproவை விட்டு வெளியேறலாம்.


மேலும் இதில் பல விளையாட்டுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.