Pages

Thursday, February 25, 2010

உபுண்டுவில் number command

உபுண்டுவில் டெர்மினலில் நாம் பலவிதமான கட்டளைகளை கொடுக்கிறோம். அதை மறந்துவிடுவோம். ஆனால் உபுண்டு அந்த கட்டளைகளை நினைவில் வைத்திருக்கும்.

எப்படி என்று பார்ப்போம். உதாரணமாக டெர்மினலில்

#sudo apt-get update என்று ஒரு கட்டளையை கொடுப்போம். கட்டளை முடிந்தவுடன் டெர்மினலில்

@history | tail -3 என்று கட்டளை கொடுத்தால்



நாம் இதற்குமுன் கொடுத்த மற்ற இரண்டு கட்டளைகளும் சேர்ந்து மொத்தம் மூன்று கட்டளைகளாக டெர்மினலில் தெரியும்.

மூன்றிற்கு பதில் 10,20, என்று கூட கொடுக்கலாம்.

மேலே உள்ள படத்தில் 187 என்ற எண்ணிற்கு நேராக sudo apt-get update என்ற கட்டளை இருப்பதை பார்க்கலாம். இந்த கட்டளையை செயல்படுத்த கட்டளை முழுவதையும் தட்டச்சு செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக

#!187 என்று மட்டும் தட்டச்சு செய்தால் 187 என்ற எண்ணிற்கு நேராக உள்ள கட்டளை செயல்படதுவங்கும். இந்த 186,187,188 எண்கள் அவரவை கணினிக்கு ஏற்றார் போல் மாறும்.


இப்போது sudo apt-get update கட்டளை செயல்படுவதை பார்க்கலாம். இதுபோல் வேறு பல கட்டளைகள் கொடுத்து இருந்தால் அதையும் செயல்படுத்தலாம்.


No comments: