உபுண்டுவில் alises என்பது நாமே உருவாக்கும் கட்டளைகள் ஆகும். அதாவது பல கட்டளை வாக்கியங்களை சுருக்கி ஒரே ஒரு வார்த்தையில் தருவது.
உதாரணமாக நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் கட்டளைகள்
sudo apt-get update
sudo apt-get upgrade என்ற கட்டளைகளை உபயோகிப்போம். அல்லது
sudo apt-get update && sudo apt-get upgrade என்றவாறு உபயோகிப்போம். அப்படியில்லாமல் வேறு மாதிரி பயன்படுத்தலாம்.
home அடைவினுள் இருக்கும் கோப்பான bashrc என்ற கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்ப்பதன் மூலம் சுருக்கி தரமுடியும். இதை காண home அடைவினுள் சென்று contrl+H பொத்தான்களை அழுத்தவேண்டும். கோப்பின் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் கோப்பு திறந்து கொள்ளும்.
bashrc என்ற கோப்பில் (homeஅடைவினுள் இருப்பது) கடைசியில்
alias upgrade='sudo apt-get update && sudo apt-get upgrade' என்ற வரிகளை சேர்த்து பின்னர் சேமிக்கவேண்டும்.
டெர்மினலில்
upgrade என்று மட்டும் தட்டச்சு செய்தால் மேலே சொன்ன இரண்டு கட்டளைகளும் செயல்படுவதை பார்க்கலாம்.
இது போல் பல கட்டளைகளை செயல்படுத்தலாம். உதாரணமாக
alias killfx='kill -9 $(pidof firefox)'
alias gotocd='cd /media/cdrom0' ஆகிய இரண்டு கட்டளைகள்
முதல் கட்டளை நெருப்பு நரியை மூடிவிடும்.நெருப்பு நரி திடீரென்று நின்று போனால் இதை உபயொக்கிலாம்.
இரண்டாவது கட்டளை cdயில் உள்ள கோப்புகளை காணலாம்.
Thursday, February 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment