ஒப்பன் ஆபிஸ் 3.2 அண்மையில் வெளி வந்து இருக்கிறது. அதனுடைய இணையதளத்தில் சென்று உபுண்டுவிற்கு தேவையான நிரல்களை தரவிறக்கி கொள்ளலாம்.
இதற்கான ppa இன்னும் வெளியாகவில்லை. deb பொதிகளை தரவிறக்கி நிறுவும்போது சரியாக நிறுவ முடியவில்லை. எனவே ppa வருகைக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது.
டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்வதன் மூலம் ppaவை software sourceல் சேர்த்துக்கொள்ளலாம்.
sudo add-apt-repository ppa:openoffice-pkgs/ppa
sudo apt-get update && sudo apt-get upgrade
ஆனால் update செய்யும்போது பிழை காட்டுகிறது. எனவே இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
Saturday, February 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment