முதலில் இதை நிறுவ டெர்மினலில்
sudo apt-get install xclip என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும். இதை செயல்படுத்த முதலில்
ls -la என்று தட்டச்சு செய்தால் டெர்மினலிலேயே output வந்துவிடும்.

இந்த outputஐ ஒரு txt கொப்பில் xclip மூலமாக சேமிக்க முடியும்.டெர்மினலில்
ls -la | xclip என்று தட்டச்சு செய்தால்

என்றவாறு இருக்கும். ஒரு text editorஐ பயன்படுத்தி ஒரு text கோப்பினை திறந்து அதில் mouseன் நடுவில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் கோப்பில் output paste செய்யப்பட்டுவிடும்.

இந்த கோப்பினை பெயர் கொடுத்து செமித்துக்கொள்ளலாம்.
மேலும் ஒரு கோப்பில் இருப்பதை இன்னொரு கோப்பில் காப்பி செய்வதற்கு அதாவது
/etc/apt/sources.list என்று முக்கியமான ஒரு கோப்பினை backup எடுப்பதற்கு டெர்மினலில்
xclip /etc/apt/sources.list என்று தட்டச்சு செய்து பின்னர் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து அதில் paste செய்து செமிக்கலாம்.

பின்னர் இந்த கோப்பிற்கு பெயர் கொடுத்து செமித்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment