இதற்கு முதலில் hplip நிறுவப்பட்டு இருக்க வேண்டும். இது applications->ubuntu software center ல் இருக்கிறது. பின்னர் உலாவியை திறந்து அதன் அட்ரஸ் பாரில் localhost:631 என்று தட்டச்சு செய்யவேண்டும்.முதலவதாக அச்சு இயந்திரத்தை கணினியுடன் இணைக்க வேண்டும். அதை onlineல் இருக்க செய்யவேண்டும்.

பின்னர் cups for administrators என்பதன் கீழ் அமைந்துள்ள add printers and classes என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் add printer ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில் உபுண்டுவி லாகின் பெயரையும் கடவு சொல்லையும் தட்டச்சு செய்யவேண்டும்.
இதில் அச்சு இயந்திரத்தின் வரிசை  எண்ணுடன்  HP Deskjet F4200 series USB CN96Q580GY05BR HPLIP (HP Deskjet F4200  series) என்பதனை  டிக் செய்து continue பொத்தனை  அழுத்தவேண்டும்.
இதிலும் continue பொத்தனை  அழுத்தவேண்டும்.
பின்னர் add printer என்ற பொத்தனை  அழுத்தவேண்டும்.
இதில் பேப்பரின் அளவு போன்றவற்றை  அமைக்கலாம். set default option அழுத்தவேண்டும்.
அவ்வளவுதான் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டுவிட்டது. பின்னர் system->administration->printing சென்றால் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதை  பார்க்கலாம்.
ஒருசில அச்சு இயந்திரத்திற்கான driver கள் உள்ளிணைப்பாகவே  அமைந்துள்ளது. எனவே அச்சு இயந்திரம் நிறுவுவதில் அதிகம் சிரமம் இருக்காது.


No comments:
Post a Comment