Pages

Friday, April 30, 2010

உபுண்டு 10.04 நிறுவுதல்



உபுண்டு 10.04 நேற்று இரவு சுமார் 10 லிருந்து 11 மணியளவில் தான் அதன் தளத்தில் போட்டார்கள்ள். அதன் நிறுவும் வழிமுறைகளைப் பார்ப்போம். அதன் சில படக்காட்சிகளையும் பார்ப்போம்.



















இது LTS பதிப்பு. எனவே 9.10லிருந்து இதற்கு மாறிக்கொள்ளலாம்.

Thursday, April 29, 2010

உபுண்டுவில் subdirecotryல் உள்ள கோப்புகளின் எண்ணிக்கை

புண்டுவில் உள்ள அனைத்து sub-directoryல் உள்ள கோப்புகளின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள ஒரு script.

ஒரு டெக்ஸ்ட் கோப்பில கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவேண்டும்.

#!/bin/bash
# Write a script that will count the number of files in each of your subdirectories.
# -------------------------------------------------------------------------


START=$HOME

# change your directory to command line if passed
# otherwise use home directory
[ $# -eq 1 ] && START=$1 || :

if [ ! -d $START ]
then
echo "$START not a directory!"
exit 1
fi

# use find command to get all subdirs name in DIRS variable
DIRS=$(find "$START" -type d)

# loop thought each dir to get the number of files in each of subdir
for d in $DIRS
do
[ "$d" != "." -a "$d" != ".." ] && echo "$d dirctory has $(ls -l $d | wc -l) files" || :
done

இந்த கோப்பிற்கு cofil என்று பெயரிடலாம். அல்லது அவரவர் விருப்பம் போல் பெயரிடலாம். இதை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x cofil என்று தட்டச்சு செய்யவும்.

பின்னர் டெர்மினலில்

sudo ./cofil என்று தட்டச்சு செய்தால் உபுண்டுவில் உள்ள ஒவ்வொரு அடைவினுள் இருக்கும் sub-directoryல் உள்ள கோப்புகளின் எண்ணிக்கை திரையில் தெரியும்.


முதலில் home அடைவில் இருந்து ஆரம்பிக்கும்.

உபுண்டுவில் script calculator

உபுண்டுவில் டெர்மினலில் இயங்ககூடிய script calculator ஒன்றை பார்ப்போம். இது command lineல் இயங்கூடியது.

முதலில் கீழே இருக்கும் வரிகளை காப்பி செய்து ஒரு டெக்ஸ்ட் கோப்பில் பேஸ்ட் செய்து செமிக்கவேண்டும்.

#!/bin/bash
# Shell Program to simulate a simple calculator
# --------------------------------------------------------------------
# This is a free shell script under GNU GPL version 2.0 or above
# Copyright (C) 2005 nixCraft project.
# -------------------------------------------------------------------------

a=$1
op="$2"
b=$3

if [ $# -lt 3 ]
then
echo "$0 num1 opr num2"
echo "opr can be +, -, / , x"
exit 1
fi

case "$op" in
+) echo $(( $a + $b ));;
-) echo $(( $a - $b ));;
/) echo $(( $a / $b ));;
x) echo $(( $a * $b ));;
*) echo "Error ";;
esac

இந்த ஸ்க்ரிப்டை இயங்ககூடிய நிலையில் வைக்க

sudo chmod +x cal என்று கட்டளை கொடுக்க வேண்டும்.

கூட்டல்

./cal 23 + 23 =46

பெருக்கல்

./cal 100 x 2 = 200 இங்கு '*' வைக்க கூடாது. 'x' என்று கொடுக்க வேண்டும்.

வகுத்தல்

./cal 100 / 2 = 50

கழித்தல்

./cal 100 - 2 = 98




இங்கு cal என்பது நான் என்னுடைய கணினியில் scriptன் பெயர் ஆகும். இதை அவரவர் விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம்.

Wednesday, April 28, 2010

உபுண்டுவில் control centre

புண்டுவில் control centre என்பது applications, places and system போன்றவற்றில் உள்ள அனைத்து மெனுக்களையும் ஒரே இடத்தில் இருக்கும்.

இது உபுண்டுவில் default ஆக இருக்காது. இதை வரவழைக்க இடது மூலையிலுள்ள applications என்பதன் மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்கினால் வரும் சிறிய விண்டோவில் edit menu வை தேர்ந்தெடுக்க வேண்டும்.

system->preference->main menu தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதை இயக்க system->control centre செல்ல வேண்டும்.



இந்த control centreல் அனைத்து settings அமைத்துக்கொள்ளலாம்.இதை இயக்குவதற்கு system->control centre செல்ல வேண்டும். எந்த மெனுவையும் தேடிச்செல்லாமல் இந்த ஒரு இடத்திலேயே பார்த்துக்கொள்ளலாம்.

உபுண்டுவில் pdf to text

புண்டுவில் pdf கோப்புகளை text கோப்புகளாக மாற்ற முடியும். இதற்கு

system->administration->synaptic package manager சென்று அதன் search பெட்டியில் pdftotext என்று உள்ளீடு செய்தால் நமக்கு poppler-utils என்ற நிரல் வரும். அதை தேர்வு செய்து நிறுவிக்கொள்ளவேண்டும்.


இதனை செயல்படுத்த டெர்மினலில்

pdftotext xxx.pdf xxx.txt என்று தட்டச்சு செய்யவேண்டும். நமக்கு தேவையான கோப்பின் பெயர் கொடுக்கவேண்டும்.


மேலே உள்ள படத்தில் ஒரு pdf கோப்பு text கோப்பாக மாற்றியப்பின் எப்படி இருக்கும் என காட்டுகிறது. இப்போது கோப்பினை திறந்து பார்க்கலாம்.

ஒரு pdf கோப்பு

text கோப்பாக மாற்றியப்பின்



இதில் மேலும் சில கட்டளைகள்

pdftotext -l 4 xxx.pdf xxx.txt என்று கட்டளையிட்டால் கடைசி நான்கு பக்கங்கள் மட்டும் text கோப்பாக மாற்றும்.

pdftotext -f 3 xxx.pdf xxx.txt என்று கட்டளையிட்டால் முதல் மூன்று பக்கங்கள் மட்டும் text கோப்பாக மாற்றும்.

இந்த பக்கங்களின் எண்ணிக்கையை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.


pdftotext -upw 'password' xxx.pdf xxx.txt என்று கட்டளை கொடுத்தால் கடவுச்சொல் உடைய pdf கோப்பினை மாற்றலாம்.

Tuesday, April 27, 2010

உபுண்டுவில் நம்முடைய ip address காண

புண்டுவில் நம்முடைய ip address காண்பதற்கு சில இணையதளங்களை நாட வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறில்லாமல் command line கட்டளை மூலம் காணலாம். IP address என்பது நம்முடைய கணினி இணையத்தில் இணையும் போது நம்முடைய internet service provider நமக்கு அளிக்கும் ஒரு அடையாளமாகும்.

முதலில் wget பயன்படுத்தி ip address காணலாம்.

wget -q -O - checkip.dyndns.org|sed -e 's/.*Current IP Address: //' -e 's/<.*$//' இரண்டாவது முறை curl பயன்படுத்தி ip address காணலாம். curl -s checkip.dyndns.org|sed -e 's/.*Current IP Address: //' -e 's/<.*$//' பின்னர் http://whatismyip.org/ மூலமாகவும் இதனை சோதித்து கொள்ளலாம்.

உபுண்டுவில் encrypted கோப்பு

உபுண்டுவில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். எப்படி என்று பார்ப்போம்.


இதில் 1. ஒரு சாதரண டெக்ஸ்ட் கோப்பு. 2.encrypt செய்யப்பட்ட கோப்பு. பெயர் mydoc.txt.gpg என்று மாறியிருக்கிறது.

இதற்கு முதலில் டெர்மினலில்

gpg -c mydoc.txt என்று கட்டளையிட வேண்டும். கடவுச்சொல் கேட்கும்.கொடுத்தவுடன் மீண்டும் கேட்கும்.


encrypt செய்த கோப்பினை திறப்பதற்கு கோப்பின் மீது கர்ஸரை வைத்து இரட்டை சொடுக்கினால் திறக்காது.


இதை திறப்பதற்கு டெர்மினலில்.

gpg mydoc.txt.gpg என்று தட்டச்சு செய்யவேண்டும். கடவுச்சொல் கேட்கும். நாம் ஏற்கனேவெ கொடுத்த கடவுச்சொல்லை கொடுக்கவேண்டும்.


ஒரு சாதாரண டெக்ஸ்ட் கோப்பினை கூட இந்த முறையில் பாதுகாத்துக்கொள்ளலாம்.

Monday, April 26, 2010

உபுண்டுவில் maximise,minimise,close பொத்தான்கள்-3

புண்டுவில் maximise,minimise,close பொத்தான்களை வலமிருந்து இடமாக மாற்றுவதைப்பற்றி எழுதியிருந்தேன், வரும் 10.04ல் பொத்தான்கள் இடது பக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பதிவு- 1

பதிவு-2

இதை நம் விருப்பம் போல் மாற்றுவதற்கான ஒரு script. இதை தரவிறக்கி பயன்படுத்தலாம். நான் என்னுடைய கணினியில் desktopல் வைத்துள்ளேன். தரவிறக்கி பெயர் மாற்றம் செய்து பயன்படுத்தலாம். இதன் பெயர் நீளமாக உள்ளது.



இதை இயங்ககூடிய நிலையில் வைக்க டெர்மினலில்

arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ sudo chmod +x winbutt.sh
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$

என்னுடைய கணினியில் நான் மேசைமீது வைத்திருப்பதால் மேற்கண்ட கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அவரவர் விருப்பம் போல் கோப்பினை வெவ்வேறு அடைவினுள் செமிக்கலாம்.

இதை இயக்க
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ ./winbutt.sh என்று தட்டச்சு செய்யவேண்டும்.


மேலே உள்ள படத்தில் பொத்தான்கள் வலது பக்கமாக வைக்க செக் செய்யப்பட்டிருக்கிறது. move window buttons to the 'left'side என்பதனை செக் செய்து ok பொத்தானை அழுத்தினால் இடது பக்கமாக மாறிவிடும்.





இந்த script இயக்கும்போது நான்கு option கேட்கும். முதல் இரண்டை பார்த்துவிட்டோம். மூன்றாவத இருக்கும் option indicate change for the buttons manually என்பதை தேர்ந்தெடுத்தால் வலது பக்கமா அல்லது இடது பக்கமா என்பது நாமே தேர்ந்தெடுக்கலாம்.




நான்காவது option தேர்ந்தெடுத்தால் default வந்துவிடும்.

உபுண்டுவில் எந்த வகை கோப்பாக இருந்தாலும் preview காண

உபுண்டுவில் எந்த வகை கோப்பாக இருந்தாலும் அதை preview காண உதவும் நிரல் gloobus preview என்ற நிரல். இதை நிறுவுவதற்கு டெர்மினலில்

sudo add-apt-repository ppa:gloobus-dev/gloobus-preview என்று தட்டச்சு செய்து அதன் ppa வை நம்முடைய source listல் செர்த்துவிடவேண்டும். பின்னர் டெர்மினலில்

sudo apt-get update && sudo apt-get install gloobus-preview என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

இது ஆதரிக்கும் கோப்புகளின் வடிவங்கள்

Images: jpeg / png / icns / bmp / svg / gif / psd / xcf
Documents: pdf / cbr / cbz / doc / xls / odf / ods / odp / ppt
Source: c++ / c# / java / javascript / php / xml / log / sh / python
Audio: mp3 / ogg / midi / 3gp / wav
Video: mpg /avi / ogg / 3gp / mkv / flv
Other: folders / ttf / srt / plain-text

இதை நிறுவியப்பின் system->preference->compizconfig settings manager செல்ல வேண்டும்.



இதில் commandsஐ டிக் செய்துவிட்டு இரட்டை சொடுக்கினால் வரும் விண்டோவில் இதற்கான command கொடுக்க வேண்டும். commandline0 விற்கு நேராக gloobus-preview என்று தட்டச்சு செய்ய வேண்டும்.



பின்னர் அடுத்த டேப் key bindings சென்று key combinationஐ தேர்ந்தெடுக்க வேண்டும். நமக்கு தேவையான எது வேண்டுமானலும் கொடுக்கலாம். ஆனால் இங்கு key combination வேறு எங்கும் இதே கட்டளைதான் கொடுக்கும். எனவே ஏனைய நிரல்கள ஏதையும் பாதிக்காமல் கொடுக்கலாம்.



இவற்றையெல்லாம் முடித்துவிட்டு preview காண nautilus file manager திறந்து ஏதேனும் ஒரு கோப்பின் மீது இடது சொடுக்கி காப்பி தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் key combinationல் எந்த keyயை கொடுத்துள்ளோமொ அதை பயன்படுத்தினால் preveiw காணலாம்.

Sunday, April 25, 2010

உபுண்டுவில் initrd.img கோப்பு

புண்டு பூட் ஆவதற்கு உதவும் ஒரு கோப்புதான் initrd.img என்ற கோப்பாகும். இது உபுண்டுவில் /boot/அடைவினுள் இருக்கும். அதாவது வேறு பெயருடன் இருக்கும்.

initrd.img-2.6.31-21-generic என்று இருக்கும். boot loaderல் kernel 2.631-21-generic என்று இருக்கும்.


இதில் என்ன இருக்கிறது என்று நாம் பார்த்தொம்மென்றால் கணினை இயக்க கூடிய பலவித கட்டளைகள் அடங்கி இருக்கும். இதை பார்ப்பதற்கு /boot அடைவினுள் இருக்கும்போதே பார்க்ககூடாது. அப்படியே இடது சொடுக்கி copy தேர்ந்தெடுத்து desktopலோ அல்லது வேறு ஏதாவது அடைவினுளோ paste செய்துவிடவேண்டும்.

பின்னர் கோப்பினை பெயர் மாற்றம் செய்யவேண்டும். அதாவது initrd.gz என்று மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த கோப்பு zip format கோப்பாகும்.


இந்த கோப்பினை இரட்டை சொடுக்கினால் கோப்பு விரிந்து ஒரு விண்டோவில் தெரியும்.


இதில் initrd ல் இரட்டை சொடுக்கினால் zip வடிவம் விரிந்து அதில் இருக்கும் அடைவுகள்,கோப்புகள் அனைத்தும் தெரியும்.


இதில் இருக்கும் அடைவுகளில் கோப்புகள் இருக்கும்.



இந்த கோப்பில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் செய்துவிட்டு மீண்டும். initrd.gz என்று அனைத்துகோப்புகளியும் சுருக்கி பின்னர் பெயர் மாற்றம் செய்யவேண்டும்.

கோப்பின் மீது இடது சொடுக்கி rename என்பதனை தேர்ந்தெடுத்து அதே பெயர் கொடுத்துவிட வேண்டும். initrd.img-2.6.31-21-generic என்றே பெயர் கொடுக்க வேண்டும். பின்னர் /boot/ அடைவினுள் காப்பி செய்துவிடவேண்டும். ஏற்கனவே இருக்கும் initrd.img-2.6.31-21-generic கோப்பினை ஒரு backup எடுத்துக்கொள்வது நல்லது.

Advanced users only

உபுண்டுவில் அடைவுகளின் அளவை காண கட்டளைகள்

புண்டுவில் நாம் பயன்படுத்தும் அடைவுகளின் அளவை காண டெர்மினலில் இரண்டு கட்டளை பயன்படுகின்றன.

for f in * ; do if [ -d "$f" ]; then du -sh "$f" ; fi done | sort -n

என்று டெர்மினலில் கட்டளையிட்டால் documents, picture,music,videos போன்ற அடைவுகளின் அளவை மட்டும் காட்டும்.



இரண்டாவாது கட்டளை அனைத்து அடைவுகளின் அளவை காண உதவுகிறது

du -k --max-depth=1 | sort -n | cut -f2 | xargs -d '\n' du -sh

என்று டெர்மினலில் கட்டளையிட வேண்டும்.


எந்த அடைவில் தேவையில்லாமல் கோப்புகள் இருக்கிறதோ அதை அழித்துவிட இந்த இரண்டு கட்டளைகள் உதவும்.