
Alt+F2 என்ற இரண்டு பொத்தான்களையும் ஒன்றாக அழுத்தினால் வரும் விண்டோவில் gconf-editor என்று தட்டச்சு செய்யவேண்டும்.

run பொத்தானை அழுத்த configuration editor விண்டோ விரியும்.

இதில் apps->metacity->general சென்றால் வலது புறத்தில் buttons_layout தேர்ந்தெடுத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் edit key தேர்ந்தெடுக்கவேண்டும்.அதில் value வில் இருக்கும் :minimize,maximize,close என்ற மதிப்பின் முன்னால் இருக்கும் ':' குறியீட்டை பின்னால் இட அதாவது minimize,maximize,close: என்றவாறு இருக்க இப்போது minimize,maximise,close பொத்தான்கள் இடது ஒரத்தில் வந்துவிடும்.

மேலே உள்ள படத்தில் உள்ளது போல் மூன்று பொத்தான்களும் வந்துவிடும். மீண்டும் வலது ஒரத்தில் அமைக்க வேண்டுமென்றால் :minimize,maximize,close என்று மதிப்பை அமைத்தால் வந்துவிடும்.
No comments:
Post a Comment