Pages

Sunday, April 11, 2010

உபுண்டுவில் damnvid ஒரு வீடியோ தரவிறக்கி

புண்டு:Damnvid என்பது ஒரு வீடியோ தரவிறக்கும் மென்பொருள் ஆகும். இது youtube,google உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களிலுருந்து வீடியோ கோப்புகளை தரவிறக்குவது மட்டுமல்லது அதை வெவ்வெரு வடிவங்களிலும் மாற்றம் செய்கிறது.

இதை எப்படி நிறுவுவது என்பது பற்றி பார்ப்போம். மிகவும் எளிய நிரல். இதன் அளவு 20.5 mb அளவுதான்.Damnvid என்ற சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.

இதை செயல்படுத்த Applications->sound & video->Damnvid தேர்ந்தெடுக்க வேண்டும்.



இதில் உள்ள search பொத்தானை அழுத்தினால்


இதில் search boxல் நம்முடைய விருப்பம் போல் ஏதெனும் ஒரு வீடியோ கீ வார்த்தையை கொடுக்கலாம். search பொத்தானை சொடுக்கினால் நாம் தேடிய வீடியோக்கள் வந்துவிடும். மொத்தாமாக எல்லா வீடியோ அல்லது ஒவ்வொன்றாகவோ தரவிறக்கலாம்.


பின்னர் profile சென்று நமக்கு விருப்பமான வடிவங்களில் கோப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.
lets go என்ற பொத்தானை அழுத்தியவுடன் கோப்புக்கள் தரவிறங்க ஆரம்பிக்கும்.

இதில் Damnvid->preference சென்றால் கோப்புகள் தரவிறங்கும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம்.



இப்போது தரவிறக்கி நான் avi வடிவத்தில் மாற்றிய வீடியோ கொப்பு.


வீடியோவின் தரமும் மாற்றம் செய்வதற்கு முன் எப்படி இருந்ததொ அப்படியே இருக்கிறது.




totem movie playerல் ஒடும்போது எடுக்கப்பட்டது.

2 comments: