Pages

Wednesday, March 31, 2010

உபுண்டு top panelல் minimise,maximise,close button

புண்டுவில் top panelல் minimum,maximum,cloese பொத்தான்களை அமைக்கலாம். இது எல்லாவகை விண்டோவையும் இதன் மூலம் இயக்கலாம்.


இதை நிறுவுவதற்கு இந்த சுட்டியிலிருந்து நிரலை தரவிறக்கி நிருவிக்கொள்ளவேண்டும். இதை நிருவியவுடன் top panelல் வரவழைக்க top panelல் கர்சரை வைத்து இடது சொடுக்க வரும் விண்டோவில் add to panel தேர்ந்தெடுக்க வேண்டும்.




மேலே உள்ள படத்தில் உள்ளவாறு தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். இப்போது top panelல் icon இருக்கும்.

இதில் பல்வேறு optionகள் அமைக்க சுர்சரைவைத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் preference தேர்ந்தெடுக்க வேண்டும்.








எந்த ஒரு விண்டோவானாலும் இதன் மூலம் control செய்ய முடியும்.


நாம் ஏதாவதொரு விண்டோவை திறந்தால் top panelல் இந்த iconகள் வந்துவிடும். minimise செய்தால் மறைந்துவிடும். பின்னர் maximise செய்தால் top panelல் வந்துவிடும்.

Tuesday, March 30, 2010

உபுண்டுவில் eithernet card speed மாற்றுதல்

புண்டுவில் eithernet card speed மாற்றுவது எப்படி என்று பார்போம். முதலில் டெர்மினலில்

sudo apt-get install ethtool என்று தட்டச்சு செய்து ethtool என்ற நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும். eithernet cardன் வேகத்தை காண network manager iconஇல் இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் connection information தேர்ந்தெடுக்க வேண்டும்.





டெர்மினலில்

sudo ethtool eth0 என்று தட்டச்சு செய்தால்


இதன் வேகத்தை மாற்ற டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவேண்டும்.

இதன் syntax

sudo ethtool -s eth0 speed [speed] duplex [duplex] ஆகும். இப்போது

sudo ethtool -s speed 100 duplex full என்ற கட்டளை வேகம் 100 ஆகும்.

வேகம் 10ஆக மாற்றுவதற்கு

sudo ethtool -s speed 10 duplex full என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

உபுண்டுவில் pulseaudioவிற்கு பதிலாக alsa மாற்றுவதற்கு

புண்டுவின் sound system ஆனது pulse audioவாக இருக்கும். இதை alsa or oss ஆக மாற்றுவதற்கான ஒரு எளிய வழி. alt+f2வை அழுத்தினால் வரும் விண்டோவில் gconf-editor என்று தட்டச்சு செய்ய வேண்டும்.


இதில் run பொத்தானை அழுத்தினால்

System->gstreamer->0.10->default என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இடது புறத்தில் இருக்கும் மதிப்புகளை மாற்ற வேண்டும்.


இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடத்தில் மாற்ற வேண்டும். அந்தந்த இடத்தில் கர்ஸரை வைத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் edit key ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.



இங்கு autoaudiosink என்பதற்கு பதிலாக alsasink அல்லது osssink என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.அல்லது டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

gconftool-2 --type string --set /system/gstreamer/0.10/default/audiosink "xxxxx"
gconftool-2 --type string --set /system/gstreamer/0.10/default/musicaudiosink "xxxxx"
gconftool-2 --type string --set /system/gstreamer/0.10/default/chataudiosink "xxxxx"

இங்கு xxxxx என்பது alsasink அல்லது osssink ஆக இருக்கலாம். நாம் எது உபயோகப்படுத்துகிறோம் என்பதை பொருத்தது.இப்போது music playerகளை restart செய்ய வேண்டும்.

மீண்டும் pulse audio விற்கே மாற விரும்பினால் மூன்று xxxxxகளிலும் autoaudiosink என்று மாற்றி டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும். " " என்ற குறிகளொடுதான் இருக்க வேண்டும்.
மீண்டும் music playerகளை restart செய்ய வேண்டும்.

gconf-editor ஐ திறக்கும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அதில் default மதிப்புகளை மாற்றும்போது எதிலாவது குறித்துகொண்டு மாற்றவேண்டும்.

Monday, March 29, 2010

உபுண்டுவில் motherboard,bios info and cpu id காண

புண்டுவில் dmidecode என்ற கட்டளையை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். அதில் ஒட்டுமொத்தமாக தகவல்கள் இருக்கும். இந்த பதிவில் தனிதனியான கட்டளைகள் பற்றி பார்ப்போம்.

CPU ID காண டெர்மினலில்

sudo dmidecode -t 4 | grep ID என்று கட்டளையிட்டால்



Serial no. காண
sudo dmidecode | grep Serial




CPU information காண
sudo dmidecode -t 4



BIOS information காண

sudo dmidecode -t 0




Motherboard information காண

sudo dmidecode -t 2

Sunday, March 28, 2010

உபுண்டுவில் device manager

புண்டுவில் device manager என்பது நம் கணினியி இருக்கும் வன்பொருளின் அமைப்பை காட்ட உதவும் ஒரு நிரல். வன்பொருட்களின் விவரம் driver என்று இன்னும் பல விவரங்களி தெரிந்துகொள்ளலாம்.

இதை நிறுவ டெர்மினலில்

sudo apt-get install gnome-device-manager என்று தட்டச்சு செய்யவேண்டும்.


Applications->system tools->device manager சென்றால்


இதில் view->device properties சென்றால் இதன் driverகள், கோப்புகள் ஆகியவை தெரியும்.


உதாரணமாக ethernet card எடுத்துக்கொள்வோம்.


இதில் properties சென்றால்


எனவே எந்த வன்பொருளின் விவரம் தெரியவேண்டுமோ அதன் அனைத்து விவரங்கள் தெரிந்துவிடும்.

இப்போது processor ஐ பார்ப்போம்.



இதன் properties


இப்போது மேலும் இரண்டு வன்பொருள்களைப்பற்றி பார்ப்போம்.

1.cd/dve rom



2.pendrive

Friday, March 26, 2010

உபுண்டுவில் tux paint

புண்டுவில் tux paint என்ற நிரல் குழந்தைகளுக்கான ஒரு படம் வரையும் ஒரு நிரல். இது விண்டோஸின் paint brush போன்றது. ஆனால் அதைவிட நன்றாக உள்ளது.

இதை நிறுவ applications->ubuntu software cener க்கு செல்ல வேண்டும்.அங்கு search boxல் tux paint என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்ட விண்டோ வரும். இதில் install பொத்தானை அழுத்தினால் நிரல் நிறுவ ஆரம்பிக்கும்.



இதை நிறுவியப்பின் applications->education->tux paint என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் பல வண்ணங்களும்,brushes,toolsகளும் உள்ளன.குழந்தைகள் விரும்பி பயன்படுத்துவிதமாக உள்ளது. இதன் சில படங்கள்




இதில் கற்பனை திறனை வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

உபுண்டுவில் wally-wallpaper changer

புண்டுவில் desktop wallpaper குறிப்பிட்ட இடைவேளையில் மாற்றும் ஒரு நிரல் தான் wally. இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிருவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் applications->accessories->wally என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் icon top panelல் வந்துவிடும். அதை இடது சொடுக்கினால் menu item வரும்.



details பொத்தானை அழுத்தினால்


இதன் main menu.



மேலே உள்ள படத்தில் காணப்படுவது settings ஆகும். இதில் நம்முடைய கணினியிலிருந்து போட்டோ ஆல்பங்கள் அடங்கிய அடைவினை தேர்ந்தெத்துக்கொள்ளலாம். அல்லது இணையத்திலுருந்தும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.picassa,photobucket போன்ற இணைய தளத்திலிருந்தும் படங்களை desktop wallpaperஆக வரவழைக்கலாம்.

இணையத்திலிருந்து வரும் படங்களை இதில் செமித்து கொள்ளலாம். இதில் பல்வேறு படங்களின் formatகளை பயன்படுத்தலாம்.

photobucket என்ற இனையதளத்தினை தேர்ந்தெடுத்திருந்தேன் அதன் ஒரு wallpaper


இதற்கு இணைய இணைப்பு அவசியம்.

Thursday, March 25, 2010

உபுண்டுவில் minimise,maximise,close button - 2

புண்டுவில் minimise,maximise,close button பற்றி ஏற்கனேவெ ஒரு பதிவில் எழுதியிருந்தேன். அதாவது வலது மூலையில் இருக்கும் இந்த மூன்று பொத்தான்களும் இடது மூலைக்கு மாற்றுவது பற்றியது. அந்த சுட்டி.


Alt+F2 என்ற இரண்டு பொத்தான்களையும் ஒன்றாக அழுத்தினால் வரும் விண்டோவில் gconf-editor என்று தட்டச்சு செய்யவேண்டும்.


run பொத்தானை அழுத்த configuration editor விண்டோ விரியும்.


இதில் apps->metacity->general சென்றால் வலது புறத்தில் buttons_layout தேர்ந்தெடுத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் edit key தேர்ந்தெடுக்கவேண்டும்.அதில் value வில் இருக்கும் :minimize,maximize,close என்ற மதிப்பின் முன்னால் இருக்கும் ':' குறியீட்டை பின்னால் இட அதாவது minimize,maximize,close: என்றவாறு இருக்க இப்போது minimize,maximise,close பொத்தான்கள் இடது ஒரத்தில் வந்துவிடும்.



மேலே உள்ள படத்தில் உள்ளது போல் மூன்று பொத்தான்களும் வந்துவிடும். மீண்டும் வலது ஒரத்தில் அமைக்க வேண்டுமென்றால் :minimize,maximize,close என்று மதிப்பை அமைத்தால் வந்துவிடும்.

Wednesday, March 24, 2010

உபுண்டுவில் openoffice 3.2 upgrade

புண்டுவில் open office 3.2க்கு இப்போது upgrade செய்துகொள்ளலாம். முன்னர் ஒபன் ஆபிஸ் வெளிவந்தபோது upgrade ஆகவில்லை. இப்போது 9.10 மட்டுமே upgrade வந்துள்ளது.

இதற்கு முதலில் டெர்மினலில்

sudo add-apt-repository ppa:openoffice-pkgs/ppa என்று தட்டச்சு செய்து software sourceல் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர்

sudo apt-get update && sudo apt-get upgrade என்று தட்டச்சு செய்து upgrade செய்துகொள்ளவேண்டும்.



முன்னர் deb கோப்புகளை தரவிறக்கி நிறுவியபோது help வேலை செய்யவில்லை. ஆனால் இப்போது வேலை செய்கிறது. புதியதாக வரும் உபுண்டு 10.04 பதிப்பில் default ஆக open office 3.2 உள்ளது.

open office 3.2 புதியதாக நிறுவ டெர்மினலில்

sudo apt-get update && sudo apt-get install openoffice-org என்று தட்டச்சு செய்யவேண்டும்.

Tuesday, March 23, 2010

உபுண்டுவில் animated desktop

உபுண்டுவில் நமக்கு பிடித்தமான வீடியோ கோப்புகளை desktop animated wallpaper ஆக செயல்படுத்தமுடியும். இதற்கு முதலில் டெர்மினலில்

sudo apt-get install zenity mplayer unrar rar என்று தட்டச்சு செய்து zenity,mplayer,unrar & rar நிரல்களை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் a-desk என்ற கோப்பினை தரவிறக்கி desktop ல் கோப்பினை விரிவாக்கம் செய்துவிடவேண்டும்.





மேலே உள்ள படத்தில் a.desk.installer என்ற கோப்பின் மீது கர்ஸரை வைத்து கிளிக் செய்ய நிரல் நிறுவ ஆரம்பிக்கும்.


இதில் ok அழுத்த



இங்கேயும் ok அழுத்த நிரல் நிறுவப்பட்டு இருக்கும்.

பின்னர் desktopல் இடது சொடுக்கி வரும் விண்டோவில் script->a.desk தேர்ந்தெடுத்தால்


இதில் நமக்கு பிடித்தமான வீடியோ கோப்பினை தேர்ந்தெடுத்தால் animated desktop தயாராகிவிடும்.

Sunday, March 21, 2010

உபுண்டு 9.10ல் 10.04 xsplash screen

புண்டு 9.10 பயன்படுத்திக்கொண்டு இருப்பவர்கள் 10.04 ன் xsplash screen கொண்டு வரமுடியும்.

Lucid xsplash என்ற சுட்டியிலிருந்து தரவிறக்கி கொள்ளவேண்டும். இதை desktopல் வைத்துகொள்ளலாம். பின்னர் tar கோப்பில் இடது சொடுக்கலில் Extract here தேர்ந்தெடுத்து desktop ல் extract செய்துகொள்ளலாம்.

பின்னர் டெர்மினலில்

cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ dir
121800-lucidXsplash.tar.gz credir~ lucidXsplash

cd lucid*
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop/lucidXsplash$ dir
1024x768.jpg 1920x1200.jpg logo_medium.png throbber_small.png
1200x1024.jpg 2560x1600.jpg logo_small.png throbber_xtra_large.png
1200x800.jpg 800x600.jpg logo_xtra_large.png txt
1440x900.jpg bg.jpg throbber_large.png txt~
1680x1050.jpg logo_large.png throbber_medium.png

பின்னர்
sudo mv *.* /usr/share/images/xsplash என்ற அடைவிற்குள் அனைத்து கோப்புகளையும் நகர்த்தி விடவும். அல்லது காப்பி செய்துவிடவும்.

பின்னர் xsplash வேலை செய்கிறத என்று பார்க்க டெர்மினலில்

sudo xsplash என்று தட்டச்சு செய்தால் 10.04ன் xsplash screen வருவதைப்பார்க்கலாம்.

உபுண்டு 10.04 சில screenshots

புண்டு 10.04 lts beta 1 கடந்த 19.03.2010 வெளியானது. அதன் screenshotகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையான பதிப்பு வரவில்லை. ஏப்ரல் 29,2010 அன்று வெளிவர இருக்கிறது. தரவிறக்கி live cd ஆக உபயோகித்துப்பார்க்கலாம்.











இதில் firefox 3.6 உள்ளது. minimise,maximise,close பொத்தான்கள் வலதுபக்கத்திற்கு பதிலாக இடதுபக்கத்தில் உள்ளது.