உபுண்டுவில் கணினியை இயக்குவதற்கும், இணைய உலா வருவதற்கும் நாம் கட்டுபாடுகளை விதிக்கமுடியும்.
அதாவது 1.ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம்தான் கணியை இயக்க அல்லது இணைய உலா வர, இமெயில் செய்யமுடியும் என்பதை நாம் முடிவு செய்ய முடியும்.
2.ஒரு நாளில் எந்த நேரத்தில் கணியை இயக்க வேண்டும் என்பதையும் நாம் முடிவு செய்ய முடியும்.
இந்த நிரல் நம்முடைய வீட்டில் இருக்கும் மகனோ அல்லது மகளோ இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
எனவே டெர்மினலில்
9.10 ஆக இருந்தால்
sudo add-apt-repository ppa:nanny என்றும்
9.04 ஆக இருந்தால்
sudo bash -c "echo 'deb http://ppa.launchpad.net/nanny/ppa/ubuntu jaunty main' >> /etc/apt/sources.list"
&& sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys 132D48BA
என்றும் கட்டளை தரவேண்டும்.
பின்னர் டெர்மினலில்
sudo apt-get update && sudo apt-get install nanny என்று தட்டச்சு செய்ய நிரல் நிறுவப்பட்டுவிடும்.
இந்த நிரலை இயக்க
System->Administration->Parental control என்பத தேர்வு செய்ய வேண்டும்.
மேலே உள்ள படத்தில் use the computer என்பதனை தேர்ந்தெடுத்தால் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கணினியை உபயோகப்படுத்தலாம் என்பதனை தீர்மானிக்கலாம். அதே நேரத்தில் கீழே உள்ள கட்டங்களில் அந்தெந்த கிழமைகளில் எந்தெந்த நேரத்தில் கணினியை உபயோகிக்கலாம் என்பதை தேர்வு செய்யலாம். நமக்கு வேண்டியதை தேர்வு செய்து கீழே apply பொத்தானை அழுத்தி செமித்துகொள்ளலாம்.
இதே போல் இணைய உலா, இமெயில், instat messaging போன்றவற்றையும் அமைத்திடலாம்.
இணைய உலாவில் பல பார்க்ககூடாத இணைய தளங்களை யாரும் பார்க்கவண்ணம் தடுத்திடலாம்.
இதில் add போத்தானை அழுத்தி இணைய தள முகவரிகளை சேர்த்துக்கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ள நிரல் என்பதில் சந்தேகம் இல்லை.
Friday, March 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தங்களின் இந்த உபுண்டு பதிவு மிக உதவியாக இருக்கிறது. நன்றி!
Post a Comment