Pages

Tuesday, March 30, 2010

உபுண்டுவில் pulseaudioவிற்கு பதிலாக alsa மாற்றுவதற்கு

புண்டுவின் sound system ஆனது pulse audioவாக இருக்கும். இதை alsa or oss ஆக மாற்றுவதற்கான ஒரு எளிய வழி. alt+f2வை அழுத்தினால் வரும் விண்டோவில் gconf-editor என்று தட்டச்சு செய்ய வேண்டும்.


இதில் run பொத்தானை அழுத்தினால்

System->gstreamer->0.10->default என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இடது புறத்தில் இருக்கும் மதிப்புகளை மாற்ற வேண்டும்.


இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடத்தில் மாற்ற வேண்டும். அந்தந்த இடத்தில் கர்ஸரை வைத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் edit key ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.



இங்கு autoaudiosink என்பதற்கு பதிலாக alsasink அல்லது osssink என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.அல்லது டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

gconftool-2 --type string --set /system/gstreamer/0.10/default/audiosink "xxxxx"
gconftool-2 --type string --set /system/gstreamer/0.10/default/musicaudiosink "xxxxx"
gconftool-2 --type string --set /system/gstreamer/0.10/default/chataudiosink "xxxxx"

இங்கு xxxxx என்பது alsasink அல்லது osssink ஆக இருக்கலாம். நாம் எது உபயோகப்படுத்துகிறோம் என்பதை பொருத்தது.இப்போது music playerகளை restart செய்ய வேண்டும்.

மீண்டும் pulse audio விற்கே மாற விரும்பினால் மூன்று xxxxxகளிலும் autoaudiosink என்று மாற்றி டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும். " " என்ற குறிகளொடுதான் இருக்க வேண்டும்.
மீண்டும் music playerகளை restart செய்ய வேண்டும்.

gconf-editor ஐ திறக்கும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அதில் default மதிப்புகளை மாற்றும்போது எதிலாவது குறித்துகொண்டு மாற்றவேண்டும்.

No comments: