உபுண்டுவில் font அதாவது எழுத்துரு எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.முதலில் டெர்மினலில் ஒரு காலியான கோப்பினை திறந்துகொள்ளவேண்டும்.
sudo gedit ~/.gnome2/nautilus-scripts/fontint என்று கட்டளையிட வேண்டும். பின்னர் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்துவிடவும். இந்த script இயங்ககூடிய நிலையில் வைக்க டெர்மினலில்
sudo chmod +xt ~/.gnome2/nautilus-scripts/fontint என்று தட்டச்சு செய்யவேண்டும்.
#!/bin/bash
#
# Autore: Mosconi Marco (brus46)
# Licenza: GPL 2 or later
#
gksu mkdir /usr/share/fonts/truetype/myfonts
for arg do
files=`echo "$arg" | sed 's/ /\\ /g'`
gksu cp "${files}" /usr/share/fonts/truetype/myfonts/
zenity --title=FontInstaller --info --text="${files}"
done
gksu fc-cache -f -v
zenity --title=FontInstaller --info --text="Fonts installed"
exit 0
பின்னர் ஒரு எழுத்துரு கோப்பின் மீது வைத்து இடது சொடுக்கலில் script->fontint என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது எழுத்துரு நிறுவப்பட்டுவிடும்.
மேலே படத்தில் இருப்பது தினதந்தி நாளிதழின் எழுத்துரு ஆகும். இதை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம். இதன் மீது இடது சொடுக்கலில் script->fontint என்று தேர்ந்தெடுத்தால் எழுத்துரு நிறுவப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.
இங்கு ok அழுத்தவேண்டும்.
இப்போது எழுத்துறு நிறுவப்பட்டு விடும். இப்போது எழுத்துரு அடைவினை பார்ப்போம்.
இப்போது நாளிதழை பார்ப்போம்.
Friday, March 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment