
applications->system tools->cryptkeeper என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
top panelலில் இதற்கென ஒரு icon நிரலை ஆரம்பித்தவுடன் தோன்றும். இதை கிளிக் செய்தவுடன் new encrypted folders தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் Name என்ற இடத்தில் அடைவின் பெயரை கொடுக்க வேண்டும். எடுத்துகாட்டாக நான் ram123 என்று கொடுத்து பின்னர் forward பொத்தனை அழுத்தினால் அடுத்த விண்டொ திறக்கும்.

இதில் அடைவிற்கு வேண்டிய கடவுச்சொல் தரப்படவேண்டும். பின்னர் forward பொத்தனை அழுத்தினால் அடைவு ஏற்பட்டுவிடும்.
இதனை desktopல் பார்க்க

இதை unmount செய்ய top panelல் இருக்கும் iconல் சொடுக்கி /home/username/ram123 என்பதற்கு நேராக இருக்கும் பெட்டியில் இருக்கும் டிக்கை எடுத்துவிடவேண்டும்.
பின்னர் பாதுகாக்கப்பட்ட அடைவை திறக்க மீண்டும் Applications->System tools->Cryptkeeper சென்று /home/username/ram123 என்பதற்கு முன்னால் டிக் செய்துவிடவேண்டும்.
இப்போது கடவுச்சொல் கேட்கும்.

கடவுச்சொல் கொடுத்தவுடன் அடைவு திறக்கப்படும். இந்த அடைவு நம்முடைய /home/username என்ற அடைவினுள் இருக்கும். இங்கு ram123 என்று அடைவின் பெயர் ஒரு எடுத்துக்காட்டிற்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. அவரவர் விருப்பம் போல் பெயரை அமைத்துக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment